|
பாத மயக்கே, பாவின் புணர்ப்பே,
ஒற்றுப் பெயர்த்தல், ஒருபொருட் பாட்டே,
சித்திரப் பாவே, விசித்திரப் பாவே,
விகற்ப நடைய வினாவுத் தரமே,
சருப்பதோ பத்திரம், சார்ந்த எழுத்து
வருத்தனம் மற்றும் வடநூற் கடலுள்
ஒருக்குடன் வைத்த உதாரணம் நோக்கி
விரித்து முடித்த மிறைக்கவிப் பாட்டே;1
உருவக மாதி விரவியல் ஈறா
வருமலங் காரமும் வாழ்த்தும் வசையும்
கவியே கமகன் வாதி வாக்கியென்
றவர்கள் தன்மையும் அவையின தமைதியும்
பாடுதல் மரபும் தாரணைப் பகுதியும்
ஆனந்தம் முதலிய ஊனமும் செய்யுளும்
விளம்பனத் தியற்கையும் நரம்பின் விகற்பமும்
பண்ணும் திறமும் பாலையும் கூடமும்
எண்ணிய திணையும் இருதுவும் காலமும்
எண்வகை மணமும் எழுத்தும் சொல்லும்
செந்துறை மார்க்கமும் வெண்டுறை மார்க்கமும
தந்திர உத்தியும் தருக்கமும் நடமு
முந்துநூல் முடிந்த முறைமையின் வழாஅமை
வந்தன பிறவும் வயினறிந் துரைப்போன்
அந்தமில் கேள்வி ஆசிரி யன்னே.
இச்சூத்திரம் நூல் உரைக்கும் ஆசிரியனது பெருமை உணர்த்துதல்
நுதலிற்று.
மாலை மாற்றாவது, ஈறு முதலாக வாசித்தாலும் அப்பாட்டே ஆவது.
வரலாறு :
[குறள் வெண்பா]
‘நீமாலை மாறாடி நீனாடு நாடுனா
நீடிறா மாலைமா நீ
எனவும்,
1 பிங். சூ. 368. பி - ம். 1 சித்திரக் காவே விசித்திரக் காவே.
|