|
‘பூமாலை காரணீ பூமேத வேதமே
பூணீர காலைமா பூ.’
எனவும்,
[நேரிசை வெண்பா]
‘காதுரும பூமாலை காதுசேர் போதாமி
காதொருவன் யார்வேலை மாமாது - காதுமா
மாலைவேர் யான்வருதோ காமிதா போர்சேது
காலைமா பூமருது கா.’
எனவும்,
‘காடா மாதால் தாகா காதால் தாமா டாகா.’
எனவும்,
‘காடா மாற பிறமா மாதா தாமா மாற பிறமா டாகா.’
எனவும் வரும்.
சக்கரம் வருமாறு: சக்கரம் பல விதத்தவாயினும், நான்காரச் சக்கரமும்,
ஆறாரச் சக்கரமும், எட்டாரச் சக்கரமும் என அடங்கும்.
அவற்றுள் நான்காரச் சக்கரம் வருமாறு.
[நிலைமண்டில ஆசிரியப்பா]
‘மேனமக் கருளும் வியனருங் கலமே
மேலக விசும்பின் விழவொடும் வருமே
மேருவரை யன்ன விழுக்குணந் தவமே
மேவதன் றிறநனி மிக்கதென் மனமே.’1
இது நான்கு ஆராய், நடுவு ‘மே’ என்னும் எழுத்து நின்று, முதலும்
ஈறும் அதுவேயாய்ச் சூட்டின்மேல் நாற்பத்து நான்கு எழுத்தாய், ஆர்மேல்
ஒரோ எழுத்தாய் முற்றுப் பெற்றது.
[நேரிசை ஆசிரியப்பா]
‘நவைக்கணம் வீய நன்னூ லாய்ந்து
சேட்டலர் விராய மோட்டார் பிண்டி
1. யா. வி. 52 உரை மேற்.
|