பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           563

     நன்னிழன் மேயோன் சேவடி
     துன்னினர் துன்னலர் துகட்டிரும் பிறப்பதே.’1

     இது நான்கு ஆராய், நடுவு ‘மோவிராய’ என்பது பட்டு, ஆர்மேல் ஐ வைந்தெழுத்தாய், சூட்டின்மேல் முப்பத் திரண்டு எழுத்துப் பெற்று முடிந்தது.

     இனி, ஆறாரச்சக்கரம் வருமாறு:

[நேரிசை வெண்பா]

     ‘பூங்கடம்பி னந்தார்தா நன்று புனைதேனார்
     கோங்கெழு கொங்கந்தார் தான்பேணு - மோங்குநன்
     மாக்கோதை மாதவித்தார் தாங்கோட லெண்ணுமாற்
     பூக்கோதை மாதர்தம் பொற்பு.’

     இஃது ஆறு ஆராய், நடுவு ரகரவொற்று நின்று, குறட்டைச் சூழத் தா என்னும் எழுத்து நின்று, ஆர்மேல் ஏழெழுத்து நின்று, சூட்டின்மேற் பன்னிரண்டு எழுத்துப்பெற்று முடிந்தது.

[நேரிசை வெண்பா]

     ‘கொலைமான் விழியறல் குன்றாத செவ்வி
     கலிவான்சென் றூன்ற மயங்கி - யொலிபாவி
     விண்க ணிடித்துரற லின்றாகி மின்னுக
     கொண்கன் வரவிரவின் கண்.’

     இஃது ஆறு ஆராய், ‘கலி மல்லன்’ என்னும் பெயர் குறட்டைச் சூழ நின்று, நடுவு றகரம் நின்று, ஆர்மேல் அவ்வாறு எழுத்துப் பெற்று, சூட்டின் மேல் பன்னிரண்டு எழுத்துப் பெற்று, அவ்வெழுத்து மாலை மாற்றாய் முடிந்தது.

[நேரிசை வெண்பா]

     ‘மண்பாய வையகத்து மாலைமாற் றீறாக
     எண்பா லெழுத்தும் இணையொப்ப - வெண்பாவின்
     சீர்கிடப்பத் தென்றமி ழாளி கலிமல்லன்
     பேர்கிடப்பப் பேசல் அரிது.’

 இதன் வழியே எழுதிக் கண்டு கொள்க.


  பி - ம். 1 பிறப்பே.