பக்கம் எண் :
 

 564                                   யாப்பருங்கல விருத்தி

[நேரிசை வெண்பா]

     ‘தக்கவர் சம்பந்தந் தாங்கி யிவணெஞ்சா
     மக்கட் டொகைஞாலந் தந்தோம்பி - மிக்கின்றோ
     விண்மணந் தஞ்சாந்தந் நீவி நிரைத்தந்த
     தண்மணவிற் சான்றோர் தயா.’

     இதுவும் ஆறு ஆராய், நடுவுத் தகாரம் நின்று, குறட்டைச் சூழ நகர ஒற்று நின்று, ஆர்மேல் எவ்வே ழெழுத்துநின்று, சூட்டின்மேற் பன்னிரண்டு எழுத்துப் பெற்று முடிந்தது.

[நேரிசை வெண்பா]

     ‘ஆறாராய் அவ்வார்மேல் எவ்வே ழெழுத்தாகி
     ஏரார்ந்த நேமிமேல் ஈராறாய்ச் - சீரார்ந்த
     ஒண்குறட்டைச் சூழ நடுவோர் தகாரமேற்
     றண்மணவிற் சக்கரமாந் தான்.’

 இதன் வழியே எழுதிக் கண்டு கொள்க.

 இனி, எட்டாரச் சக்கரம் வருமாறு:

[நிலைமண்டில ஆசிரியப்பா]

     ‘கார்க்கட லொலிமா வார்ப்பொ டானாக்
     கோளகட் டாவ மாழ்துய ரழுந்த
     வாகந் திருநல மாகமுன் னடைமத்
     தாவரை நிறீஇய மால்வரை கடிந்த
     காடவர் கோன்றிரு வாரமிழ் தாடவர்க்
     கடைந்த தப்புரத் தக்கது தானே.’

[நேரிசை வெண்பா]

     ‘ஆரெட்டாய் அவ்வார்மேல் ஐயைந் தெழுத்தாகி
     ஏரொத்த நேமிமேல் எண்ணான்காய் - வாரத்தால்
     வாழ்க வலிவல மாவுளதேன் மாதவர்கோன்
     சூழ்தருமச் சக்கரமாச் சொல்லு.’

 இதன் வழியே அதனை எழுதிக் கண்டு கொள்க.