பக்கம் எண் :
 

 6                                     யாப்பருங்கல விருத்தி

 நேரீற்றியற்சீர், சிறப்புடைய நிரையீற்றியற்சீர், சிறப்பில் நிரை யீற்றியற்சீர், சிறப்புடை நேரீற்றுரிச்சீர், சிறப்பில் நேரீற்றுரிச் சீர், சிறப்புடை நிரையீற்றுரிச்சீர், சிறப்பில் நிரையீற்றுரிச்சீர், சிறப்புடை நேரீற்றுப் பொதுச்சீர், சிறப்பில் நேரீற்றுப் பொதுச்சீர், சிறப்புடை நிரையீற்றுப் பொதுச்சீர், சிறப்பில் நிரையீற்றுப் பொதுச்சீர் என்னும் விரியானும்;

தளை, (தொகை, வகை, விரி).

     வெண்டளை, ஆசிரியத்தளை, கலித்தளை, வஞ்சித்தளை என்னும் தொகையானும்; இயற்சீர் வெண்டளை, உரிச்சீர் வெண்டளை, பொதுச்சீர் வெண்டளை, நேரொன்று ஆசிரியத்தளை, நிரையொன்று ஆசிரியத்தளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை என்னும் வகையானும்; இயற்சீர்ச் சிறப்புடை வெண்டளை, இயற்சீர்ச் சிறப்பில் வெண்டளை, உரிச்சீர்ச் சிறப்புடை வெண்டளை, உரிச்சீர்ச் சிறப்பில் வெண்டளை, பொதுச்சீர்ச் சிறப்புடை வெண்டளை, பொதுச்சீர்ச் சிறப்பில் வெண்டளை, நேரொன்றிய சிறப்புடை ஆசிரியத்தளை, நேரொன்றிய சிறப்பில் ஆசிரியத்தளை, நிரையொன்றிய சிறப்புடை ஆசிரியத்தளை, நிரையொன்றிய சிறப்பில் ஆசிரியத்தளை, சிறப்புடைக் கலித்தளை, சிறப்பில் கலித்தளை, ஒன்றிய சிறப்புடை வஞ்சித்தளை, ஒன்றிய சிறப்பில் வஞ்சித்தளை, ஒன்றாத சிறப்புடை வஞ்சித்தளை, ஒன்றாத சிறப்பில் வஞ்சித்தளை என்னும் விரியானும்;

ஆடி: (தொகை, வகை விரி)

     இயலடி, உரியடி, பொதுவடி என்னும் தொகையானும்; குறளடி சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என்னும் வகை யானும்; இயற்குறளடி, உரிக்குறளடி, பொதுக்குறளடி, இயற்சிந்தடி, உரிச்சிந்தடி, பொதுச் சிந்தடி, இயல் அளவடி, உரி அளவடி, பொது அளவடி, இயல் நெடிலடி, உரி நெடிலடி, பொது நெடிலடி, இயற்கழிநெடிலடி, உரிக்கழி நெடிலடி, பொதுக் கழிநெடிலடி என்னும் விரியானும்: தொடை;


     குறிப்பு சுகிர்ந்து - பிளவுபட்டு, பாரம்பரம் - முறைமை, பனுவல் - நூல். சிறப்பெழுத்து = ஓரெழுத்தே ஒரு பொருளைப் பயந்து நிற்பன. உறுப்பெழுத்து - இயைந்து பொருள்பயப்பன.