|
இராக்கதமாவது, ஆடை மேலிடுதல், பூ மேலிடுதல், கதவடைத்தல்
முதலியவற்றால் வலிதிற் கோடல்.
என்னை?
[நேரிசை வெண்பா]
‘பூந்துகிலோ டின்னவுமேல் இட்டும் புதவடைத்தும்
பாய்ந்து கதந்தாஅய்ப்1 பற்றிக்கொண் - டேந்திழையை
எய்தப் படுவ திராக்கதம் என்பதே
மைதீர்ந்தார் சொல்லும் மணம்.’
பைசாசமாவது, துஞ்சினாரோடும், மயங்கினாரோடும், களித்தா ரோடும்,
செத்தாரோடும், விலங்கினோடும் இழிதகு மரபில் யாருமில்லா ஒரு
சிறைக்கண் புணர்ந்து ஒழுகும் ஒழுக்கம்.
என்னை?
[நேரிசை வெண்பா]
‘துஞ்சல் களித்தல் மயங்குதல் மாழாத்தல்
அஞ்சல் அறிவழிதல் சாதலென் - றெஞ்சினவும்
இன்ன திறத்தான் இழிதக வெய்துபவேல்
பின்னைப் பிசாசமணப் பேர்.’
எனவும்,
‘குணத்தி னிழிந்த மயங்கியவ ரோடும்
பிணத்தினும் விலங்கினும் பிணைவது பிசாசம்.’
எனவும் சொன்னாராகலின்.
கந்தருவமாவது, ஒத்த குலனும் குணனும் அழகும் அறிவும் பருவமும்
உடையார், யாருமில் ஒருசிறைக்கண் அன்பு மீதூரத் தாமே புணர்ந்து
ஒழுகும் ஒழுக்கம்.
என்னை?
நேரிசை வெண்பா
‘ஒத்த குலத்தார் தமியராய் ஓரிடத்துத்
தத்தமிற் கண்டதம் அன்பினால் - உய்த்திட
பி - ம். 1 வலிந்துதாய்
|