|
ஒலியெழுத்தாவது,
‘இசைப்படு புள்ளின் எழாஅல் போலச்
செவிப்புல னாவ தொலியெழுத் தாகும்.’
தன்மையெழுத்தாவது,
‘முதற்கா ரணமுந் துணைக்கா ரணமும்
துணைக்கா ரணத்தொடு தொடரிய உணர்வும்
அவற்றொடு புணர்ந்த அகத்தெழு வளியின்
மிடற்றுப்பிறந் திசைப்பது தன்மை எழுத்தே.’
என எழுத்தினது விகற்பமும், எழுத்தினது புணர்ச்சியும் எழுத்ததி காரத்துட்
காண்க.
அ, க, ச, ட, த, ப, ய முதலிய ஆயவெழுத்தும்; அ, ச, ல, வ,
ர, ங, ய, முதலிய இராசி எழுத்தும்; கார்த்திகை முதலிய நாள் எழுத்தும்;
தோபம் முதலிய நால்வகை எழுத்தும்; சாதி முதலிய தன்மை எழுத்தும்;
உச்சாடனை முதலிய உக்கிர எழுத்தும்; சித்திர காருடம் முதலிய முத்திற
எழுத்தும்; பாகியல் முதலிய நால்வகை எழுத்தும்; புத்தேள் முதலிய
நாற்கதி எழுத்தும்; தாது முதலிய யோனி2 எழுத்தும்; மாகமடையம்1
முதலிய சங்கேத எழுத்தும்; கலி முதலிய சங்கேத எழுத்தும்; பார்ப்பான்
வழக்காகிய பதின்மூன்றெழுத்தும் என்ற இத்தொடக்கத்தனவும்; கட்டுரை
எழுத்தும்; வச்சிரம் முதலிய வடிவெழுத்தும்; மற்றும் பல வகையாற்
காட்டப்பட்ட எல்லா எழுத்தும் வல்லார்வாய்க் கேட்க.
இனி, சொல் நான்கு வகைய: பெயர்ச்சொல், தொழிற்சொல்,
இடைச்சொல், உரிச்சொல் என.
‘எப்பொரு ளேனும் ஒருபொருள் விளங்கச்
செப்பி நிற்பது பெயர்ச்சொல் ஆகும்.’
‘வழுவில் மூவகைக் காலமொடு சிவணித்
தொழில்பட வருவது தொழிற்சொல் ஆகும்.’
‘சுடுபொன் மருங்கிற் பற்றா சேய்ப்ப
இடைநின் றிசைப்ப திடைச்சொல் ஆகும்.’
பி - ம். 1 வொளி 2 மாதமடை
| |