|
அவற்றுட் ‘செந்துறை’ என்பது, பாட்டிற்கு ஏற்பது; ‘வெண்டுறை‘
என்பது, ஆடற்கு ஏற்பது.
என்னை?
‘செந்துறை என்ப தொலிகுறித் தற்றே;
வெண்டுறை என்பது கூத்தின் மேற்றே.’
என்பவாகலின்.
செந்துறை விரி மூவகைய: செந்துறையும், செந்துறைச் செந்துறையும்,
வெண்டுறைச் செந்துறையும் என.
வெண்டுறை விரி மூவகைய: வெண்டுறையும், வெண்டுறை
வெண்டுறையும், செந்துறை வெண்டுறையும் என.
என்னை?
‘ஆங்கிரு துறையும் அறுவகைப் பகுதிய
பாங்கின் உணரும் பண்பி னானே.’
அவற்றுட் செந்துறைப் பாட்டாவன, பரிபாடலும், மகிழிசையும்,
காமஇன்னிசையும் என்பன.
என்னை?
‘தெய்வம் காமம்
மையில் பொருளாம் பரிபா டல்லே
மகிழிசை நுண்ணிசை யுரிபெரு மரபிற்
காமவின் னிசையே யாற்றிசை இவற்றைச்
செந்துறை என்று சேர்த்தனர் புலவர்.’
என்றாராகலின்.
செந்துறைச் செந்துறைப் பாட்டாவன,
‘ஓங்கெழில் முதலாக்
குன்று கூதிர் பண்பு தோழி
விளியிசை முத்துறழ் என்றிவை யெல்லாம்
தெளிய வந்த செந்துறைச் செந்துறை.’1
எனக் கொள்க.
1 இதனுள் ‘ஓங்கெழில்’ என்பது, ‘ஓங்கெழி லகல்கதிர் பிதிர்துணி மணிவிழ
முந்நீர் விசும்பொடு பொருதலற’ என்னும் பாட்டையும்; ‘குன்று’ என்பது,
‘குன்று குடையாக் குளிர்மழை தாங்கினான்’ என்னும் பாட்டையும்; ‘கூதிர்’
என்பது, ‘கூதிர்கொண் டிருடூங்கும்’ என்னும் பாட்டையும்; ‘பண்பு’ என்பது,
‘பண்பு கொள்செயன்மாலை’
|