பக்கம் எண் :
 

 616                                   யாப்பருங்கல விருத்தி

     வெண்டுறைச் செந்துறைப் பாட்டாவன, கலியும், வரியும், சிற்றிசையும், சிற்றிசைச் சிற்றிசையும் என்ற இத்தொடக்கத்தன.

     என்னை?

     ‘கலியே வரியே சிற்றிசை என்றா
     மலிதரு பேரிசைச் சிற்றிசைச் சிற்றிசை
     என்றிவை யெல்லாம் பாணி யியந்தூக்
     கொன்ற நோக்கி ஒளிபட வந்த
     வெண்டுறைச் செந்துறை வேண்டுங் காலை.’

 என்றாராகலின்.

     வெண்டுறைப் பாட்டாவன, இலக்கு நாட்டிச் செய்யப்படும் கூத்திற்கு உரியவாகிய வரியும், குரவையும், மண்டிலமும், சேதமும் முதலிய.

     வெண்டுறை வெண்டுறைப் பாட்டாவன, பதினோராடற்கும் ஏற்ற பாட்டு அவை அல்லியம் முதலியவும் பாடல்களாக ஆடுவாரையும் பாடல்களையும் கருவியையும் உந்து இசைப்பாட்டாய் வருவன.

     என்னை?

     ‘அவ்வப் பொருளால் அரில்தப நாடிப்
     பாட்டினிற் புகழ்தல் பாடலி தாகலிற்
     பதினோ ராடற் பாட்டாய் வந்தன
     வெண்டுறை வெண்டுறை எனவிரித் தனரே.’

 என்றாராகலின்.

     இனி, இவற்றின் உறுப்பு ஐம்பத்து மூன்றாவன, அல்லிய உறுப்பு ஆறு; கொட்டி உறுப்பு நான்கு; குடத்தின் உறுப்பு ஐந்து; பாண்டரங்க உறுப்பு ஆறு; மல்லாடல் உறுப்பு ஐந்து; துடியாடல் உறுப்பு ஆறு; கடையத்து உறுப்பு ஆறு; பேட்டின் உறுப்பு நான்கு; மரக்காலாடல் உறுப்பு நான்கு; பாவை உறுப்பு மூன்று என இவை.

 என்னும் பாட்டையும்; ‘தோழி‘ என்பது, தோழி வாழி தோழி வாழி, வேழ மேறி வென்ற தன்றியும்’ என்னும் பாட்டையும், ‘விளியிசை’ என்பது, ‘விளியிசைப்ப விண்ணநடுங்க’ என்னும் பாட்டையும்; ‘முத்துறழ்’ என்பது, ‘முத்துறழகலந்தேங்கி’ என்னும் பாட்டையும் முதல் நினைப்புக் குறிப்பால் உணர நின்றன.


  (நன். மயிலை. 268 உரைமேற்கோள் நோக்குக.)