இவற்றின் தன்மை செயிற்றியமும், சயந்தமும், பொய்கையார் நூலும்
முதலியவற்றுட் காண்க; ஈண்டு உரைப்பிற் பெருகும்.
‘பதினோ ராடலும் ஆடினார் யாரோ?’ எனின்,
[குறள் வெண்பா]
‘அல்லியம் மாயவன் ஆடல்; அதற்குறுப்புச்
சொல்லினரா றாகத் துணிந்து.’
‘கொட்டி கடம்பமர்ந்தான் ஆடல்; அதற்குறுப்
பொட்டினார் மூன்றுடன் ஒன்று.’
‘அறுமுகத்தன் ஆடல் குடைக்கூத் ததற்குப்
பெறுமுறுப்பு நான்காகப் பேசு.’
‘குடத்தாடல் குன்றெடுத்தான் ஆடல்; அதற்கு
மடக்கிய ஐந்துறுப் பாம்.’
‘முக்கணன் ஆடிற்றுப் பாண்டரங்கம்; மற்றதற்
கொக்குமுறுப் பாறா உணர்.’
‘மாயவன் ஆடிற்று மல்லாடல்; மற்றதற்
காய உறுப்புக்கள் ஐந்து.’
‘துடியாடல் மங்கை எழுவர தாடற்
கடியாம் உறுப்புக்கள் ஆறு,’
‘கடையம் அயிராணிஆடல்; அதனிற்
குடைய உறுப்பைந்தோ டொன்று.’
‘காமன தாடலாம் பேட்டா டதற்குறுப்பு
நாமிக வாராயின் நான்கு.’
‘மாயவள் ஆடல் மரக்கால்; அதற்குறுப்
பேய்வன ஈரிரண்ட டென்.’
‘திருவாடல் பாவை; அதற்குறுப்புத் தேரின்
ஒருவா திரண்டுடன் ஒன்று.’
எனக் கொள்க.
[குறள் வெண்பா]
‘பல்வரை நின்றாடல் ஆறு;மற் றைந்துந்தன்
எல்லையின் வீழ்ந்தாடல் என்.’
|