|
அவற்றிற்குச் செய்யுள்:
‘பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபேர்
உன்னேனென் றூழுலக்கை பற்றினேற் - கென்னோ1
மனனோடு வாயெல்லாம் மல்குநீர்க் கோழிப்
புனனாடன் பேரே வரும்!’
எனவும்,
‘வான்றோயும் பொன்னெயிலான் வண்டார் மலரடிக்கீழ்த்
தேன்றோய் மலர்பெய்ம்மின் சென்று.’
எனவும் இவற்றுள் வெண்பா உரிச்சீர் நான்கும் வந்தன.
வஞ்சி உரிச்சீர் நான்கிற்கும் வாய்பாடு:
‘தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி:’
எனவும்,
‘மாவாழ்சுரம், புலிவாழ்சுரம், புலிபடுசுரம், மாபடுசுரம்.’
எனவும்,
‘பூவாழ்பதி, திருவாழ்பதி, திருவுறைபதி, பூவுறைபதி.’
எனவும்,
‘மீன்வாழ்துறை, சுறவாழ்துறை, சுறமறிதுறை, மீன்மறிதுறை.’
எனவும்,
‘பூண்மென்முலை, புணர்மென்முலை, புணரிணைமுலை, பூணிளமுலை.’
எனவும் வரும்.
அவற்றிற்குச் செய்யுள்:
‘சுறமறிவன துறையெல்லாம்;
இறவீன்பன இல்லெல்லாம்;
மீன்றிரிவன கிடங்கெல்லாம்;
தேன்றாழ்வன பொழிலெல்லாம்;
எனவாங்கு,
பி - ம்.:1 கன்னோ
குறிப்பு:- கழல் - வீரகண்டை; கிள்ளி - சோழன்; உன்னேன் - நினையேன்;
ஊழுலக்கை - நினைப்பழிதல்; என்னோ - எக்காரணத்தாலோ; கோழி -
(சோழர்க்குத் தலைநகராகிய) உறையூர்; புனல் நாடன் - சோணாட்டான்.
|