பக்கம் எண் :
 

 உறுப்பியல் - சீர் ஓத்து                                   65

     தண்பணை தழீஇய இருக்கை
     மண்கெழு நெடுமதில்1 மன்னன் ஊரே.’

 எனவும்,

     ‘தாளோங்கிய தண்பிண்டியின்
     நாண்மலர்விரி தருநிழற்கீழ்ச்
     சுடர்பொன்னெயில் நகர்நடுவண்
     அரியணைமிசை இனிதமர்ந்தனை

               அதனால்,

     பெருந்தகை அண்ணல்! நிற் பரவுதும்
     திருந்திய சிவகதி சேர்கயாம் எனவே.’1

 எனவும் இவற்றுள் வஞ்சியுரிச்சீர் நான்கும் வந்தன.

     பூந்தாமரைப் போதலமரத்
     தேம்புனலிடை மீன்றிரிதர
     வளவயலிடைக் களவயின்மகிழ்
     வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்
     மனைச்சிலம்பிய மணமுரசொலி
     வயற்கம்பலைக் கயலார்ப்பவும்

               நாளும்,

     மகிழும் மகிழ்தூங் கூரன்
     புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே.’2


     1 திருப்பாமாலை, 1 யா. வி. சூ. 15, 21, 90 உரைமேற். 2 தொல். பொ. செய். சூ. 19.

     பொன் எயில் - பொன் மதில்.

     பி - ம்.: 1 செங்கோல்.

     குறிப்பு : சுற - சுறாமீன்; மறிவன - திரிவன; துறை - நீர்த்துறை; இறவு - தேன் கூடு; கிடங்கு - குளம்; தேன் தாழ்வன - தேன் சிந்துவன; பொழில் - சோலை; தண்பணை - மருத நிலம்; இருக்கை - இருப்பிடம்.

     பிண்டி - அசோக மரம், நாள் மலர் - புது மலர்; எயில் - மதில்; நடுவண் - இடையில்; அரியணை - சிங்காதனம்; அண்ணல் - பெரியோனே; நிற்பரவுதும் - உன்னை வணங்குவோம்; சிவ கதி - சமணர் கூறும் முத்தி நிலை (சிலப். 10 : 180.)

     குறிப்பு:- போது - மலர்; அலமர - அசைய; புனல் - நீர்; களவயின் - களவொழுக்கத்தில்; கம்பலை - ஒலி; சிலம்பவும் - ஒலிக்கவும்; கயல் - கெண்டை மீன்; மகிழ் தூங்கு ஊரன் - மகிழ்ச்சி தங்கியுள்ள மருத நிலத் தலைவன்; ஆனா - கெடாத; வண்மையன் - வள்ளல்.