பக்கம் எண் :
 

 உறுப்பியல் - சீர் ஓத்து                                   67

     ‘ஈரசைச்சீர் பின்முன் னாவைத் துறழ்ந்து
     மாறியக்கால் நாலசைச் சீர்பதி னாறாம்.’

 என்றார் அவிநயனார்.

     அவற்றிற்கு வாய்பாடு:

       1. தேமாந்தண்ணிழல்
       2. புளிமாந்தண்ணிழல்
       3. கருவிளந்தண்ணிழல்
       4. கூவிளந்தண்ணிழல்

     எனவும்,

       5. தேமாந்தண்பூ
       6. புளிமாந்தண்பூ
       7. கருவிளந்தண்பூ
       8. கூவிளந்தண்பூ
       9. தேமாநறும்பூ
       10. புளிமாநறும்பூ
       11. கருவிளநறும்பூ
       12. கூவிளநறும்பூ

     எனவும்,

       13. தேமாநறுநிழல்
       14. புளிமாநறுநிழல்
       15. கருவிளநறுநிழல்
       16. கூவிளநறுநிழல்

     எனவும் கொள்க.

     ‘தேமா புளிமா கருவிளங் கூவிளமென்
     றாமா றறிந்தவற்றின் அந்தத்து - நாமாண்பின்
     தண்ணிழல் தண்பூ நறும்பூ நறுநிழலும்
     நண்ணுவிக்க நாலசைச்சீர் ஆம்.’

 இதன் வழியே ஒட்டுக.


  குறிப்பு : உறழ்ந்து பெருக்கி, ஒட்டுக - (சீர்களைப்) பொருத்துக.