|
‘வாய்க்காலும் வாய்த்தலையும் மாண்ட துலைவாயும்
நீக்காப் பெருந்துறையும் முன்னிறீஇ - நீக்கா
மறிவுவாழ் வென்ப திடையா முதற்கண்
சுறமறிப்பி்ன் நாலசைச்சீர் சொல்.’
எனவும்,
‘ஆரம் முறுவல் அணிவட மேகலையென்
றீரிரண்டும் வைத்தெண் இடையாரச் - சேர்வித்து
முத்தும் மணியும் முதல்வைப்ப நாலசைச்சீர்
பத்தும்இரு மூன்றும் படும்.’
எனவும் நாலசைச்சீர்க்கு வாய்பாடு கூறினார் பிறரும்.
அவற்றிற்குச் செய்யுள்:
‘அங்கண்வானத் தமரரசரும்
வெங்களியானை வேல்வேந்தரும்
வடிவார்கூந்தல் மங்கையரும்
கடிமலரேந்திக் கதழ்ந்திறைஞ்சச்
1. திருப்பா மாலை, 2 இச்செய்யுள் யா. வி. சூ. 95 உரையில் சிந்தடி வஞ்சிப்
பாவுக்கு உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளது.
குறிப்பு:- ‘அங்கண்வானத்து’ எனத்தொடங்கும் இச்செய்யுளின்
11-ஆம்
அடியிலுள்ள ‘அனந்தசதுட்டயம்’ என்னும் சீரையும், 13-ஆம் அடியிலுள்ள
‘மந்தமாருதம்’ என்னும் சீரையும், 15-ஆம் அடியிலுள்ள ‘இலங்குசாமரை’
என்னும் சீரையும் முறையே அனந்-த-சதுட்-டயம், மந்-த-மா-ருதம், இலங்
-கு-சா-மரை என அலகிட்டு, புளிமாநறுநிழல், தேமாந்தண்ணிழல், புளிமாந்
தண்ணிழல் என்னும் வாய்ப்பாடுகளாகக் கொள்க. சீர் பக்கு விட்டிசைப்
புழியும் குற்றியலுகரம் இடையிட்டி சைப்புழியும் இங்ஙனம் அசையமைதி
கொள்ளல் பண்டை வழக்கெனக் கொள்க.
கடிமலர் - மணமுள்ள மலர்; கதழ்ந்து - திரண்டு; முழுமதி - பூரணச்
சந்திரன்; புரையும் - ஒக்கும்; முக்குடை - (சந்திராதித்தம், நித்திய
வினோதம், சகல பாசனம் என்னும் மூன்று அடுக்குள்ள (அருகக் கடவுளுக்கு
உரிய) குடை (சீவக. 244) ; விளிவெய்த - அழிய; புடை - பக்கம்; அனந்த
சதுட்டயம் - (ஆன்மா நிருவாணதசையிலெய்தும்) அனந்தஞானம் (கடையிலா
அறிவு), அனந்த தரிசனம் (கடையிலாக் காட்சி), அனந்த ரீரியம் (கடையிலா
ரீரியம்). அனந்த சுகம் (கடையிலா இன்பம்) என்பன (சீவக. 2846 உரை);
நனந்தலை - அகன்ற இடம்; நவை - குற்றம்; அந்தரதுந்துபி - தேவ
வாத்தியம்; நின்றியம்ப - இடைவிடாது ஒலிக்க; அலமர - சுழலல்; ஆதி -
அருகக் கடவுள்; சித்தி - சமணர் கூறும் முத்தி நிலை.
|