|
உறுப்பியல் - சீர் ஓத்து 69 |
5. சிங்கஞ்சுமந்த மணியணைமிசைக்
கொங்கிவரசோகின் கொழுநிழற்கீழ்ச1
செழுநீர்ப்பவளத் திரள்காம்பின்
முழுமதிபுரையும் முக்குடைநிழல்
வெங்கண்வினைப்பகை விளிவெய்தப்
10. பொன்புனைநெடுமதில் புடைவளைப்ப
அனந்தசதுட்டயம் அவையெய்த
நனந்தலையுலகுடை நவைநீங்க
மந்தமாருதம் மருங்கசைப்ப
அந்தரதுந்துபி 2 நின்றியம்ப
15. இலங்குசாமரை எழுந்தலமர
நலங்கிளர்பூமழை நனிசொரிதர
இனிதிருந்
தருள்நெறி நடாத்திய ஆதிதன்
திருவடி பரவுதும் சித்திபெறற் பொருட்டே.’1
இக்குறளடி வஞ்சிப்பாவினுள்2 நாலசைச்சீர் பதினாறும் முதற்கண்ணே
வந்தன, இவை பதினாறும் சிறப்பின்மையின், ‘பொதுச்சீர்’ என்பது
காரணக்குறி.
‘பொது, சிறப்பின்மையைச் சொல்லுமோ?’ எனின், சொல்லும்.
என்னை?
‘புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புனல் ஊர! பொதுமக்கட் காகாதே;5
பாம்பறியும் பாம்பின கால்.’1
இதனுள் பொதுவைச் சிறப்பின்மைக்கட் புணர்த்தார் சான்றோர் ஆகலின்.
பிறரும் நாலசைச்சீர் எடுத்தோதினார். என்னை?
1 பழமொழி, 5.
பி - ம்.: 1 குளிர் நிழற்கீழ்ச் 2 அந்தரதுந்துபி. 3 காகாவாம்.
|