|
தால் உயிர் வாழாத நீர்வாழ்
பறவை வகை,
மகனை முறை செய்தான் - மனு
நீதிச் சோழன்,
மங்கை எழுவர் - பிராமணி,
நாராயணி, மாகேசுவரி,
கௌ மாரி, வாராகி, உருத்தி
ராணி, இந்திராணி என்னும்
சிவசத்தி மூர்த்த பேதங்
களான சத்த மாதர்கள்,
மஞ்சு - மேகம்,
மஞ்ஞை - மயில்,
மட்டு - கள்,
மடக்கு - செய்யுளிற் சொல் சீர்
முதலியவை பொருள் வேறு
பட்டு மீண்டும் மீண்டும்
வரும் சொல்லணி வகை,
மடங்கா வென்றி - கெடாத
வெற்றி,
மடப்பிடி - இளம்
பெண்யானை,
மடல் - நடச் செய்யுள் வகை
களுள் ஒன்று,
மடலூர்ச்சி - மடலூர்தல்,
மடவரல் - இளம் பெண்,
மடன் - பெண்மைக் குணங்
களுள் ஒன்று,
மடன்மா - ஒருவன் தான்
காதலித்த பெண்ணை
அடைய இயலாதபோது
மடலூரத் துணிந்து தான்
ஏறப் பனங் கருக்காற்
குதிரை போலச் செய்த
வாகனம்,
மடியுடையார் - சோம்பல்
உடையவர்,
மடுப்பு - இருமடங்கு,
மடையன் - சமையற்காரன்,
மண்டிலம்:
கூத்துக்கு உரிய வேண்
டுறைப் பாட்டுள் ஒரு
வகை,
|
பரிவேடம் (Halo)
மண்டை - இரப்பவர் ஏந்தும்
கலம்,
மண்ணு - அலங்கரி,
மணங்கமழும் தாமரைமேல்
மாது - இலக்குமி,
மணிமேகலை - பெண்டிர்
இடையில் அணியும் மேகலா
பரணம்,
மணியேர் முறுவல் - முத்துப்
போலும் பற்கள்,
மத்தகம் - தலை,
மத்திம தீபம் - இடைநிலைத்
தீவகம்,
மத நகை - உடன் பாட்டைத்
தெரிவிக்கும் புன்சிரிப்பு,
மதம் - கொள்கை,
மதலை:
1, இரு சீருடைய இசைத்
தூக்கு,
2. வீட்டின் கொடுங்கை
(cornices)
மதன் - வலிமை,
மதி - முன்னிலை அசை
(‘ஆகுமதி’),
மதியம் - பூரணச் சந்திரன்,
மதுகரம்:
இன்பம்,
தேனீ,
மதுகையோள்
வலிமையுடையவள்,
மதுத்தண்டு - கள் முதலிய வீர
பானம் நிரப்பி வைக்கும்
மூங்கிற் குழாய்,
மந்தரம்:
சுவர்க்கம்,
மலை,
மந்தன் - சனி,
மந்திர வாதம் - மந்திரங்களை
விளக்கும் நூல்,
|