|
மம்மர் - மயக்கம்,
மயக்கம் - ஐயம்,
மயிடன் - மகிடாசுரன்,
மரக்கால் - வஞ்சத்தால் வெல்லக்
கருதிய அவுணர்கள் பாம்பு
தேள் முதலிய வடிவு கொண்டு
வர, துர்க்கை அவற்றைச்
சிதைத்து அழிக்க மரத்தால்
செய்த கால்களைக்
கொண்டு ஆடிய கூத்து,
மரகதம் - பச்சைக்கல்,
மரபிற்று - இலக்கணமுடையது,
மரபின - இலக்கணமுடையன,
மரபுளி - வரன்முறை,
மராஅம் - கடப்ப மலர்,
மருக - மரபில் உள்ளவனே,
மருங்குல் - இடை,
மருட்சி - கலப்பு,
மருத்துவ நூல் - வைத்திய
சாஸ்திரம்,
மருப்பு :
விலங்கின் கொம்பு,
யானைத் தந்தம்,
மருமம் - மார்பு,
மருவாச் சொல் - மொழியிற்
பெரிதும் பயின்று வாராத
சொல்,
மருவிய சொல் - மொழியிற்
பெரிதும் பயின்று வந்த
சொல்,
மருள்:
குறிஞ்சியாழ்த்திற வகை,
மயக்கம்,
மரை - தாமரை (முதற் குறை),
மல்லல் - வளப்பம்,
மல்லாடல் - கண்ணபிரான்
மல்லனாய் வாணாசுரனை
வென்று ஆடிய கூத்து,
மலர்ப் பிண்டிப் புங்கவன் -
அருகக் கடவுள்,
|
மலர்பூ - நிரைநேர்,
மலர் மழை - நிரைநிரை,
மலாட்டு,
மலாடு - மலையமான் நாடு:
இது கொடுந் தமிழ் நாடு
பன்னிரண்டனுள் திருக்
கோவ லூரைச் சூழ்ந்த நாடு,
மலையன் - குறிஞ்சி நிலத்
தலைவன்,
மலையாறு - மலை வழி,
மலையுறை மா - சிங்கம்,
மலைவு - ஒன்றைப் பொருத்த
மின்றிக் கூறும் குற்றம்,
மழவர் - போர் வீரர்,
மழை - குளிர்ச்சி,
மறப்புறம் - வீரர்களுக்கு அரச
னால் விடப்பட்ட
இறையிலி நிலம்,
மறம்:
பகை,
பாவம்,
மறவாழி - மயக்கப் பெருக்கு,
மறி - ஆடு, குதிரை, மான்
முதலியவற்றன் இளமை,
மறுக - கலக்கமடைய,
மறுகு - தெரு,
மறுகுபு - வருந்தி,
மறுநுதி மென்முலை -
மச்சத்தை நுனியிலுடைய
மென்மை யான தனம்,
மன்னுதும் - நிலைபெற்றிருப்
போம்,
மனத்தது பாடல் - கண்டசுத்தி
பாடுதல்,
மனவு - அக்கு மணி,
மனௌகம் (மன + ஓகம்) -
உள்ளக் கிளர்ச்சி,
|