பக்கம் எண் :
 

 692                                   யாப்பருங்கல விருத்தி

மா

மா:
குதிரை,
மிருகம்,
மாஅ - விலங்குகள்,
மாஅல் - திருமாலே,
மாகதம் - மகாவீரர் காலத்தில்
வழங்கியதும், சமணாக
மங்கள் எழுதப்பட்டது
மாகிய ‘அர்த்தமாகதி’ என்னும்
பிராகிருத பாஷை,
மாக மடையம் முதலிய சங்கேத
எழுத்து,
மாகுலவர் - வேடர்,
மாண்ட - மாட்சியமைப்பட்ட,
மாண்பு - சிறப்பு,
மாணாதார் - பகைவர்,
மாத்தடிந்து - மாமரமாய் நின்ற
அசுரனை அழித்து,
மாதங்கி - ஆடல் பாடல்
வல்லவள்,
மாந்தி - விழுங்கி,
மாந்தை - சேரனுக்குரிய ஒரு
நகரம்,
மாநாய்கன் - பெரு வணிகன்,
மா மலர் - கருங்குவளை மலர்,
மாமை - அழகு,
மாயப் புணர்ச்சி - களவுச்
சேர்க்கை,
மாயவள் - துர்க்கை,
மாயவன் - கிருஷ்ணன்,
மாயிதழ் - கரிய இதழ்,
மாயோள்:
கரு நிறம் உடையவள்,
பெண்,
மாரி - மேகம்,
மால்:
புதன்,
மேகம்,
 

மாலும் - மயங்கும்,
மாலை - மாலைக்காலம்,
பூமாலை,
மாவஞ்சியாட்டி - மேன்மை
யாகிய வஞ்சி நாட்டிலே
வாழ்பவள்,
மாவடர்கண் - மாவின்
வடுவைத் தோற்றோடச்
செய்கின்ற கண்,
மாவடு - மாம்பிஞ்சு,
மாவின் திறத்தன - மாமரத்தில்
உள்ளவை (மாவடு),
மாவொடு புணர்ந்த மாஅல் -
இலக்குமியுடன் கூடிய
திருமால்,
மாழாந்து - மயங்கி,
மாழைமை - இளமை,
மாற்றார் - பகைவர்,
மாற்றிய - அழித்த,
மாற - எண்ணைப் பெருக்க,
மாறன் - பாண்டியன்,
மாறு - ஒப்பு,
மாறுகுருகு,
மாறுகோள் - மாறுபடுதல்,
மான்ற - மயங்கிய,
மானம் - குற்றம்,

மி

மிச்சிரகம் - கணித வகையுள்
ஒன்று,
மிசைதல் - உண்ணுதல்,
மிஞிறு - தேனீ,
மிடல் - வலிமை,
மியா - முன்னிலை அசை,
மிலைச்சிய - சூடிய,
மிலைச்சினை - சூடினாய்,
மிளிர்ந்த - விளங்கிய,
மிறைக் கவி - சித்திரக் கவி,
மின்னு - மின்னல்,