|
மின்னுப் பூண் - ஒளி
பொருந்திய ஆபரணம்,
மீ
மீதூர - அதிகரிக்க,
மீமிசை - சிறப்புப் பற்றி வந்த
ஒரு பொருட் பன்மொழி,
மீன்:
நட்சத்திரம்
மீனராசி,
மீனுணங்கல் - கருவாடு.
மு
முக்கணன் - சிவபெருமான்,
முக்குடை - சந்திராதித்தம்,
நித்திய வினோதம், சகல
பாசனம் என்னும் மூவடுக்கு
உள்ளதும் அருகக்
கடவுளுக்கு உரியது மாகிய
குடை,
முகனை முறை செய்த கண் -
முகத்தை அழகு செய்த
கண்கள்,
முகை - அரும்பு,
முசுண்டை - ஒரு வகைப்
படர்கொடி,
முடுகியல் அடி - அராக அடி,
முடுவல் - பெண் நாய்,
முடை - துர்நாற்றம், இறைச்சி,
முடையவர் - வறியவர்,
முண்டகம் - கடல்,
முத்தலை வேல் - சூலாயுதம்,
முத்தீ - காருக பத்தியம்,
ஆகவனீயம், தக்ஷிணாக்
கினி என்னும் மூவகை
வேள்வித்தீ,
முத்துப்படை - அழகிய
சேனை,
முத்துறழ் மணல் - முத்துப்
போன்ற மணல்,
|
முத குப்பை - கணித வகை,
முதற் பொருள் - ஐந்திணை
களுக் குரிய நிலம் பொழுது
களின் இயல்பு,
முதுக்குறைந்தனள் - பேரறிவு
அடைந்தனள்,
முது சொல் - பழமொழி,
முது பாலை - தலைவி
கணவனை இழந்து காட்டில்
தனி நின்று புலம்புவதைக்
கூறும் அகப் புறத்துறை,
முதுபோக்கு - சமையல்,
முதுபோத்து - கிழமான ஆண்,
முது வேனில் - கோடை காலம்;
ஆனி ஆடி மாதங்கள்,
முந்தையோர் - முன்னோர்,
முந்நீர் - கடல்,
முந்நெறி,
மும்மதில் - உதய தரம், பிரீதி
தரம், கல்யாண தரம் என்பன,
மும்மூன்றாம் ஆவி - ஒன்ப
தாம் உயிராகிய ஐகாரம்,
மும்மையின் இறைஞ்சும் -
மும்முறை வலம் வரும்,
முயக்கம் - புணர்ச்சி
முயல் பாய் வழிக் கயல் பாயப்
பண்ணி - கரம்பு நிலத்தை
நீர்வளமுள்ள வயலாக்கி,
முரசு - குறிலிணைக்கீழ் வந்த
குற்றுகரம்,
முரண் - பகை,
முரண்ட - மாறுபட்ட,
முரற்கை - கலிப்பா,
முரி - நாடகத் தமிழின் இறுதி
யில் வரும் சுரிதகம்; இசைப்
பாவில் இறுதிப் பகுதி,
முருக்குதல் - அழித்தல்,
முருகியம் - குறிஞ்சி நிலத்தில்
முருகனுக்குரிய
வெறியாட்டுப் பறை,
|