பக்கம் எண் :
 

 696                                   யாப்பருங்கல விருத்தி

வஞ்சியர் கோ - சேரன்,
வஞ்சியான் - கருவூரிலுள்ளவன்,
வஞ்சிக்க மாட்டான்,
வஞ்சியேன் - கருவூரிலுள்
ளேன், வஞ்சிக்க மாட்டேன்,
வட நூல் வழித் தமிழாசிரியர் -
வடநூல் வழக்கையொட்
டித் தமிழில் நூல் செய்த
ஆசிரியர்,
வடம் - முத்து மாலை,
வடாஅது - வடக்கில் உள்ளது,
வடி - கூர்மை
வடிக்கண் - நீளமான கண்
வடி நுனை எஃகம் - கூரிய
முனையையுடைய வேல்,
வடு - குற்றம்,
வடுகு - மருத யாழ்த் திறவகை,
வண்டல் - நீரால் ஒதுக்கப்
பட்ட மண்,
வண்ண ஓதி - (கரிய) நிற
முடைய கூந்தலையுடை
யாள்,
வண்ணம் :
இசை,
நிறம்,
பாவின் கண் நிகழும் ஓசை
விகற்பம்,
வணர் - வளைவு,
வணர் குழல் - சுருண்ட
கூந்தல்,
வணிகர்க்குரிய எண் வகை
நலம்,
வத்துத் தாரணை - நவ
தாரணைகளுள் ஒன்று,
வதியும் - வாழும்,
வது விச்சை - ஒரு நூல்,
வதுவை - திருமணம்,
வந்தீ - வந்தாய்,
வம்பு - முலைக்கச்சு,
 

வம்மோ - வா,
வயங்கியோர் - தெளிந்த
அறிவினையுடையவர்,
வய மன்னர் - வெற்றி வேந்தர்,
வய மீன் - உரோகிணி
நட்சத்திரம்,
வயவர் - வீரர்,
வயிரத் தாரணை - நவ
தாரணை களுள் ஒன்று,
வயினதேயன் - கருடன்,
வரஃகு - வரகுத் தானியம்,
வரகு சோறு,
வரதன் - வரமளிப்பவன்,
வரம்பிகந்து - அளவு கடந்து,
வரால் - ஒரு வகை மீன்,
வரி:
வரிக் கூத்து,
கூத்திற்குரிய வெண்
டுறைச் செந்துறைப் பாட்
டுள் ஒரு வகை,
வரி வளை - நிரை நிரை,
வருக்கை - பலாப்பழம்,
வருணம் - சாதி,
வருந - வருபவை,
வரைக்காண் நிதியீட்டம் -
மலை போலும் பெரும்
பொருட் குவியல்,
வரைதல் - நீக்கல்,
வரைப்பு - உலகம்,
வரையதர் - மலை வழி,
வரைய மகளிர் - மலைவாழ்
தெய்வப் பெண்டிர்,
வரையாது - நீக்காமல்,
வரை வயிரம் - மூங்கில்
வயிரம்,
வல் - சொக்கட்டான் காய்,
வல்லி - பூங்கொடி,
வலம்புரி - வலப்புறம்
சுழிந்துள்ள சங்கு,
வலவன் - தேர்ப்பாகன்,