பக்கம் எண் :
 

 அரும்பத அகராதி                                      697

வலித்துரைத்தல் - இடர்ப்பட்டுப்
பொருள் கொள்ளுதல்,
வலிப்பவோ - சம்மதிப்பார்
களோ,
வழங்கும் - நடமாடும்,
வழாஅ - தவறாத,
வழாஅன் - தவறான்,
வழாஅது - தவறாமல்,
வழிதபுத்தனன் - சுற்றத்தோடு
அழித்தனன்,
வழி மொழி - ஒரு வகைச்
சந்தப் பாட்டு,
வழி மொழியலன் - வழிபாடு
கூறியறியான்,
வழுதி - பாண்டியன்,
வழை - சுரபுன்னை மரம்,
வள்ளி - குறிஞ்சி நில மகளிர்
முருகக் கடவுளுக்கு மனம்
நெகிழ்ந்து வெறியாடுதலைக்
கூறும் அகப்புறத்துறை,
வள்ளுகிர் - கூரிய நகம்,
வளவன் - சோழன்,
வளாகம் - உலகம்,
வளை - ‘மலர்’ என்னும்
வாய்பாட்டுச் சீர்,
வளைஇ - வளைந்து,
வளை பெய்து - வளை
அணிந்து,
வறை - வறுத்த இறைச்சி,
வன்கணவர் - கொடியவர்,
வன்பா - வெண்பா,
வன்பால் எதுகை - வல்லின
எதுகை,

வா

வாக்கி - வார்த்து,
வாக்கு - சொல்,
வாகை - பகைவரைக்
கொன்று வாகைப்பூ
மாலை சூடி வெற்றியால்
 

ஆரவாரிப்பதையும், நான்கு
வருணத்தாரும் முனிவரும்
தத்தம் கூறுபாடுகளை
மிகுதிப் படுத்துதலையும்
கூறும் புறத்துறை,
வாங்கமை - வளைந்த மூங்கில்,
வாங்கு சினை - வளைந்த
கிளை,
வாணுதல் - ஒளி பொருந்திய
நெற்றியை உடையவள்,
வாதம்:
சல வாதம் விதண்டா
வாதம் முதலியன,
சொல்,
வாம்பரி - தாவிச் செல்லும்
குதிரை,
வாம மேகலை - அழகிய
மேகலாபரணம்,
வாமான் - குதிரை,
வாய் - ‘கதுவாய்’ என்பதன்
முதற்குறை,
வாய் காவா மழவர் - (எறி
ஆங்குத்தான் என்று)
நாயகனை நெருங்கும் வீரர்,
வாய் நேர்ந்தேன் - வாக்களித்
தேன்,
வாய்மை - வேதம்,
வாயிலா - இடை நின்று
கூட்டும் தூதாக,
வாயுறுத்தன்று - வாக்கினால்
மெய்ம்மையை வலி
யுறுத்தது,
வார் - முலைக் கச்சு,
வார் பணிய தாமம் - நீட்சியும்
புனைவும் பொருந்திய மலர்
மாலை,
வாரணம் - யானை,
வாரணவாசி - காசி நகரம்,
வாரம்
அன்பு,
சுரிதகம்,