3. சாதி வேற்றுமை
எ-டு : ' வெங்கதிர்க்கும் செந்தீ விரிசுடர்க்கும் நீங்கா(து)
பொங்கு மதியொளிக்கும் போகாது - தங்கும்
வளமையான் வந்த மதிமருட்சி மாந்தர்க்(கு)
இளமையான் வந்த இருள் '
இ-ள்: சூரியனுக்கும் , விளக்குக்கும் நீங்காது ; மதியொளிக்கும் போகாதே நிற்கும் ; இளமைப் பருவத்தில் செல்வக் களிப்பான் வந்த அறியாமையாகிய இருள் எ-று .
வி-ரை: இப்பாடற்கண் கூறப்பட்ட பொருள்கள் மருட்சியும் , இருளும் ஆகும் . இவற்றுள் முன்னையது அக இருள் : ஏனையது புற இருள் ; ஆதலின் இவ்விரண்டும் இருள் என்னும் சாதி பற்றியதாகும் ; இவ்விரண்டற்கும் வேற்றுமை கூறப்படுதலின் , இது சாதி வேற்றுமை ஆயிற்று .
4. தொழில் வேற்றுமை
எ-டு : ' புனனாடர் கோமானும் பூந்துழாய் மாலும்
வினைவகையான் வேறு படுவர் - புனனாடன்
ஏற்றெறிந்து மாற்றலர்பால் எய்தியபார் மாயவன்
ஏற்றிரந்து கொண்டமையி னால் '
இ-ள்: நீர்நாடர் கோமானாகிய சோழனும் , பொலிவினை யுடைய துளசி மாலையை அணிந்த மாயனும் தொழிலான் வேறுபட்டிருப்பர் ; சோழன் , பகைஞர் எறிந்த வேலைத் தன்மீது ஏற்றும் , தனது வேலைப் பகைஞர்மேல் எறிந்தும் கைக்கொண்ட உலகை , மாயத்தையுடைய திருமால் நீரேற்றும் இரந்தும் கொண்டமையினால் எ-று .
புனனாடு - காவிரி நாடு .
வி-ரை: இப்பாடற்கண் கூறப்பட்டவர்கள் சோழனும் , திருமாலும் ஆவர் . இருவரும் காத்தல் தொழிலால் ஒப்புமை யுடையாராயினும் , உலகைப் பெறுதலாகிய தொழிலில் வேற்றுமை கூறப்பட்டிருத்தலின் , இது தொழில் வேற்றுமை ஆயிற்று .
'திருமால் நீரேற்று வாங்கிய உலகம்' என்றது மாவலிபால் இரந்து பெற்றமையை உட்கொண்டதாகும் .
'தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு' - குறள் 129
என்பதும் இவ்வகையில் அடங்கும் . இதனைக் 'குறிப்பான் வந்த வேற்றுமை யலங்காரம்' என்பர் பரிமேலழகர் .
1அஃதேல் மேற்காட்டியவற்றுள் இந்நான்கும் ஒழித்துக் காட்டின உளவோ ? எனின் , இல்லை . மற்று இச்சூத்திரம் வேண்டா கூறினார்
1. ஈண்டுச் சில பிரதிகளில் கீழ்வருமாறு காணப்படுகிறது : - மேற் கூறியனவும் இந்நான்குமே எனப்படும் . உம்மையால் வேற்றுமை பிற அலங்காரங்களோடும் கூடி வருவது .