பக்கம் எண் :
 
116தண்டியலங்காரம்

வி-ரை:, இ-ள்: கூர்மை பொருந்திய வேலினை உடையாய் ! பாயாத வேங்கை (மரம்) மலர, அதனை மலராத புண்டரிகம் (புலி) என நினைத்து அஞ்சித் தம்மிடத்தே சாரும் பெண் யானைகளைத் தழுவி , அப்புலிக்கு எதிராகப் பேரொலி செய்யும் ஆண் யானைகள் உள்ள காட்டில் , நீ இரவில் வருதல் தவறாம் என்பதாம்.

பெண் யானைகள் , வேங்கை மலர அதனைப் புலியென்று அஞ்சின என்பது முன்னிரண்டடிகளின் கருத்தாகும் . பாயாத வேங்கை என்பதால் வேங்கை மரத்தையும் , பூவாத புண்டரிகம் என்பதால் புலியையும் குறிப்பாகப் பெறுதலால் , இது குறிப்பு விபாவனை ஆயிற்று.

இதற்கும் வினையெதிர் மறுத்துப் பொருள் புலப்படுத்தற்கும் உள்ள வேறுபாடு : - முன்னர்க் கூறிய விளையெதிர் மறுத்துப் பொருள் புலப் படுத்தலில் 'பூட்டாத வில் ' . 'தீட்டாத அம்பு' , 'காணாத கண் ' என்பவற்றால் அவ்வவ்வினைகளை மறுத்துக் கூறுமுகமாக அவ்வப்பொருள்களும் இன்னவெனக் குறிப்பால் விளங்கின . ஈண்டும் ' பாயாத வேங்கை ' 'பூவாத புண்டரிகம் ' என்பவற்றால் அவ்வவ்வினைகளை மறுத்துக் கூறுமுகமாக அவ்வப்பொருள்களும் இன்னவென விளங்கின . இவ்வாற்றான் ஒப்புமை யுடையவாயினும் , இப்பாடலில் பாடற்பொருளன்றிக் குறிப்பால் தோழி இரவுக்குறி மறுத்தாள் என்பதும் பெறப்படுகின்றது . ஆனால் அப்பாடலில் பாடற் பொருளன்றிப் பிறகுறிப்பு ஏதும் பெறப்படவில்லை . இதுபற்றியே உரையாசிரியரும் இது குறிப்பு விபாவனையின் வேறுபாடாம் எனக் கூறினர்.

10. ஒட்டணி

51. கருதிய பொருள்தொகுத்(து) அதுபுலப் படுத்தற்(கு)
ஒத்ததொன் றுரைப்பின்அஃ(து) ஒட்டென மொழிப.

எ-ன் , நிறுத்த முறையானே ஒட்டு என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: கவி தன்னால் கருதப்பட்ட பொருளை மறைத்து , அதனை வெளிப்படுத்தற்குத் தக்க பிறிதொன்றனைச் சொல்லின் , அஃது ஒட்டு என்னும் அலங்காரமாம் எ - று.

வி-ரை: இவ்வணியைப் பிறிது மொழிதல் , நுவலா நுவற்சி , சுருங்கச் சொல்லல் , தொகைமொழி என்ற பெயர்களாலும் வழங்குவர். சிலர் உள்ளுறையுவமம் , உவமப் போலி என்றும் வழங்குவர்.

அதன் வகை

52. அடையும் பொருளும் அயல்பட மொழிதலும்
அடைபொது வாக்கி யாங்ஙன மொழிதலும்
விரவத் தொடுத்தலும் விபரீதப் படுத்தலும்
எனநால் வகையினும் இயலும் என்ப.

எ-ன் , அவ்வலங்காரத்தை விரித்து உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: கூறுகின்ற பொருளும் தனது அடையும் வேறுபட மொழிதலும் , அடைபொதுவாக்கிப் பொருள் வேறுபட மொழிதலும்,