பக்கம் எண் :
 
பொருளணியியல்139

எ-ன், நிறுத்த முறையானே சுவை என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) உண்ணிகழுந் தன்மை புறத்துப் புலனாய் விளங்க, எட்டு வகைப்பட்ட மெய்ப்பட்டானும் நடப்பது, சுவை என்னும் அலங்காரமாம் எ-று.

' மெய்ப்பாட்டின் இயல்வது சுவை ' என்பதனைப் ' பொன்னின் இயன்ற குடம் ' என்பதுபோல் கொள்க.

வி-ரை: ' பொன்னின் இயன்ற ' என்பதற்குப் பொன்னால் இயன்ற எனப் பொருள் கொள்வது போல, ' மெய்ப்பாட்டின் இயல்வது ' என்பதற்கும் மெய்ப்பாட்டான் நடப்பது எனப் பொருள்கொள்ள வேண்டும் என்பது கருத்து.

(42)

அதன் வகை

69. அவைதாம்
வீரம் அச்சம் இழிப்பொடு வியப்பே
காமம் அவலம் உருத்திரம் நகையே.

எ-ன், அவ்வலங்காரத்தை விரித்து உணர்த்துதல் நுதற்று.

இ-ள்: மேற்கூறிய எண்வகைப்பட்ட மெய்ப்பாடாவன வீரமும், அச்சமும், இழிப்பும், வியப்பும், காமமும், அவலமும், உருத்திரமும், நகையுமாம் எ-று.

அவற்றுள்,

1. வீரம்

எ- டு: ' சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி
ஈர்ந்திட் டுயர்துலைதான் ஏறினான் - நேர்ந்த
கொடைவீர மோ ? மெய்ந் நிறைகுறையா வன்கட்
படைவீர மோ ? சென்னி பண்பு

1 இ-ள்: ; தன்கண் சரண்புக்க புறவினது வாரம் தனது தசையை அறுத்திட்டும், தசைநிறை போதாதற்குத் தானும் துலாத்தலை ஏறிய இது, தனது கொடையின் வெற்றியோ ? மெய்யொழுக்கம் குன்றாத வன்கண்மையுடைய படையின் வெற்றியோ ? என ஆராய்வார்க்கு இவையிரண்டும் அன்று ; சோழன் தனது தன்மை இருந்தபடி ! எ - று .

வி-ரை: கல்வி, தறுகண் , புகழ், கொடை ஆகிய நான்கும்பற்றி வீரம் பிறக்கும் என்பர் தொல்காப்பியர். இப்பாடல் கொடை வீரம்பற்றி வந்ததாகும். வாரம்-எடைக்காக.

2.அச்சம்

எ- டு: 'கைநெரிந்து வெய்துயிர்ப்பக் கால்தளர்ந்து மெய்ப்பனிப்ப
மையரிக்கண் நீர்ததும்ப வாய்புலர்ந்தாள் - தையல்
சினவேல் விடலையாற் கையிழந்த செங்கட்
புனவேழம் மேல்வந்த போது '

பனித்தல் - நடுங்கல். புனவேழம் - காட்டுயானை.


1. இவ்வுரை சில பிரதிகளில் இல்லை.