பக்கம் எண் :
 
பொருளணியியல்159

பொருப்பு ' என்றது திருவேகம்பத்து இறையை, தெய்வச் சுடர் விளக்கு- நந்தா விளக்கு.

வி-ரை:, இ-ள்: அணிகளை யணிந்த உமையம்மையின் கொங்கைகள் அழுந்துவதால் மேனி குழைந்த மலையாகிய திருவேகாம்பர நாதரும், தூண்ட வேண்டாத தெய்வத்தன்மை வாய்ந்த ஒள்ளிய திருநந்தா விளக்கும், பிறர் நாணத்தக்க கொடைத்தன்மை வாய்ந்த சான்றவரும், காஞ்சீபுரம் என்னும் வளம் பொருந்திய நகரில் உள்ளமையால் இவ்வுலகம் நிலைபெற்றிருக்கின்றது என்பதாம்.

'பண்புடையார்ப் பட்டுண் டுலகம் ' என்பர் வள்ளுவர். ஆதலின் இம்மூன்றும் காஞ்சீபுரத்தில் உள்ளதால் உலகம் நிலைபெற்றது என்றார். புகழத்தக்க இப்பொருள்கள் மூன்றும் ஒருங்கு தொகுத்துக் கூறப்பட்டிருத்தலின் இது புகழ் ஒப்புமைக் கூட்டமாயிற்று .


2. பழிப்பு ஒப்புமைக்கூட்டம்

எ- டு: ' கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும்
உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும்
இல்லிருந்(து) எல்லை கடப்பாளும் இம்மூவர்
வல்லே 1மழையருக்கும் கோள் ' - திரிகடுகம் 50

30

(இ-ள்) ' கொள்ளும் பொருளை ஆசைப்பட்டுத் தன்கீழ்க் குடியை அல்லல் செய்யும் அரசனும், உண்மை சொல்லாது சலம் பற்றி வெல்ல வழக்குச் சொல்லுவாரும், ஒருவன் இல்லிருந்து அவ்வெல்லை கடக்கின்றாளும் இம்மூவராலும் மிகுதியாக இவ்வுலகத்துக் காலமழை அருகப்படும். எ-று.

'வல்லே' என்றது மிக என்றவாறு.

வி-ரை: இப்பாடற்கண் பழிக்கத்தக்க பொருள்கள் மூன்றும் ஒருங்கு தொகுத்துக் கூறப்பட்டுள்ளமையின், இது பழிப்பு ஒப்பமைக் கூட்டமாயிற்று. (34)


27. விரோதவணி

34

81. மாறுபடு சொற்பொருள் மாறுபாட்(டு) இயற்கை
விளைவுதர உரைப்பது விரோத மாகும்.

எ-ன், நிறுத்த முறையானே விரோதம் என்னும்அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) மாறுபட்ட சொல்லானும், பொருளானும் மாறுபாட்டுத் தன்மை விளைவு தோன்ற உரைப்பது விரோதம் என்னும் அலங்காரமாம் எ-று.


1. சொல் விரோதம்

எ-டு: 'காலையும் மாலையும் கைகூப்பிக் கால்தொழுதால்
மேலை வினையெல்லாம் கீழவாம் - கோலக்
கருமான்தோல் வெண்ணீற்றுச் செம்மேனிப் பைந்தார்ப்
பெருமானைச் சிற்றம் பலத்து '


1.' மழையறுக்கும் ' என்பதும் பாடம்.