பக்கம் எண் :
 
162தண்டியலங்காரம்

தங்காதலரைத் தழுவிக்கொண்டு நின்ற நற்குல மடவாரைப் போலத் தானும் பூவினாலும் தளிரினாலும் அலங்கரிக்கப்பட்டு நறுநாற்றக் கோலத்தை உடைத்தாய்ச் சூதப்பணைகளைச் சேர்ந்து தோன்றாநின்றன; ஆதலால், தோழீ! முற்காலத்திலே பல தவஞ்செய்தனவோ? சொல்லுவாயாக எ-று.

இது களவிற் கூடிவந்த தலைவியைப் பழி்த்தற்கு மாதவியைப் புகழ்ந்தது. சூதம்-மாமரம். பணை-கிளை. மாதவி-குருக்கத்தி. ஆல்-அசை

வி-ரை: இப்பாடற்கண் கவிஞன் பழிக்கக் கருதிய பொருள் களவில் கூடிவந்த தலைவியை ஆகும். ஆனால் அதனை மறைத்து மாதவிக் கொடியைப் புகழ்ந்திருப்பதால், இது மாறுபடு புகழ்நிலை யாயிற்று.

29. புகழாப்புகழ்ச்சியணி

83 பழிப்பது போலும் பான்மையின் மேன்மை
புலப்பட மொழிவது புகழாப் புகழ்ச்சி.

எ-ன், நிறுத்த முறையானே புகழாப் புகழ்ச்சி. என்னும் அலங்காரம் உணர்த்துல் நுதலிற்று.

இ-ள்: பழித்தல் போலும் பாகுபாட்டான், ஒன்றற்கு மேம்பாடு தோன்ற உரைப்பது புகழாப் புகழ்ச்சி. என்னும் அலங்காரமாம் எ-று.

எ-டு: போர்வேலின் வென்றதூஉம் பல்புகழால் போர்த்ததூஉம்
தார்மேவு திண்புயத்தால் தாங்குவதூஉம் - நீர்நாடன்
தேரடிக்கூர் வெம்படையால் காப்பதூஉம் செங்கண்மால்
ஒரடிக்கீழ் வைத்த வுலகு'

நீர்நாடன்-சோழன். போர்த்தல்-பரப்புதல்.தாங்குதல்-எடுத்தல். தேரடிக்கூர் வெம்படை-தேர்க்கால் ஒத்துக் கூர்த்த சக்கரம்.

வி-ரை,இள்: நீர்வளம் மிக்க நாட்டையுடைய சோழன் போர் செய்ய வல்ல வேலினால் வென்றி கொண்டதும், பல்வேறுவகைப்பட்ட புகழால் முடியதும்,மாலையை யணிந்து வலிய தோளினால் தாங்குவதும், தேர்க்காலின் பெயரையுடைய கூர்மை பொருந்திய கொடிய சக்கரப்படையால் காப்பதும், சிவந்த திருக்கண்களையுடைய திருமால் தனது ஒரு திருவடியின்கீழ் அடக்கிய நிலவுலகமே யாகும் என்பதாம்.

திருமாலானவர் தன்னுடைய ஓரடியால் அளந்த உலகையே சோழன் வேலின் வென்றும், புகழால் போர்த்தும், புயத்தால் தாங்கியும்காக்கின்றனன் என்பதால்,அவனால் காக்கப்படும் உலகம் பழிக்கப்படுவது போல் தோன்றினும், அவன் உலக முழுவதையும் காக்கின்றான் என்ற மேன்மை புலப்படுதலின், இது புகழாப் புகழ்ச்சியாயிற்று.

எ-டு: 'நினைவரிய பல்புகழார் நின்குலத்துத் தொல்லோர்
அனைவரையும் புல்லினா ளன்றே - மனுநூல்
புணர்ந்த நெறியொழுகும் பூழியநீ யிந்நாள்
மணந்த தடமலர்மேல் மாது.

என்பதும் அது.