பூழியன்-சோழன்.நீ இக்காலத்து உரிமைச் சுற்றமாகக் கைப்பிடித்த சீதேவியானவளே, நின்குலத்து முன்னோர்க்கும் மடவாள் என்றவாறு. தொல்லோர்-பழையோர். புல்லுதல்-தழுவுதல்.
வி-ரை: இ-ள்: மனு நூலில் கூறியவாறு ஒழுகும் சோழனே! நின்னை இந்நாளில் உரிமையாகக்கொண்டு தங்கியிருக்கும், தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள், மனத்தாலும் நினைதற்கரிய பலவகைப் புகழுடைய உன்னுடைய முன்னோர்கள் அனைவரையும் உரிமையாகவே கொண்டொழுகின வளன்றோ என்பதாம்.
அனபாயனிடத்துத் தங்கியிருக்கும் திருமகள். அவனுக்கு முன்னேயிருந்த அவனுடைய குல முதல்வர்கள் அனைவரையும் புல்லியவளே எனபதால், அவனிடத்து இருக்கும் திரு பழிக்கப்படுவதுபோல் தோன்றினும் அவன் வழிவழியாகப் பெருஞ்செல்வம் உடையவன் என்ற மேன்மை புலப்படுதலின், இது புகழாப் புகழ்ச்சியாயிற்று.
அஃதேல், மேல் இலேசத்தின்பாற்படுத்துக் கூறிய பழிப்பதுபோலப் புகழ் புலப்படுத்தலோடு இப்புகழாப்ச்புகழ்சிக்கு வேற்றுமையும், புகழ்வது போலப் பழித்திறம் புனைத்தலோடு மேற்கூறிய, மாறுபாடு புகழ்நிலைக்கு வேற்றுமையும் யாதோ? எனின், பழிப்பதுபோலப் புகழ் புலப்படுத்தல் ஒன்றனையே பழித்தாற்போலப் புகழ்வது. புகழாப் புகழச்சி ஒன்றனைப் கழிக்க வேறொன்றற்குப் புகழாய்த் தோன்றுவது. புகழ்வதுபோலப் பழித்திறம் புனைதல் ஒன்றினையே புகழ்ந்தாற்போலப் பழிப்பது. மாறுபாடு புகழ்நிலை-ஒன்றனைப் புகழ, ஒன்றற்குப்பழிப்பாய்த் தோன்றுவது என உணர்க.
அல்லதூஉம் அவை யிரண்டும் ஒருசார் ஆசிரியர் இலேசத்தின்பாற் படுத்துக் கூறினார் என்பது அறிவித்தற்கு ஆண்டுக் கூறப்பட்டது.ஈண்டு ஒருசார் ஆசிரியர் வேறுபடுத்து வேறு அலங்காரமென்று வேண்டுவர் என்றது அறிவித்ததற்கு ஈண்டும் கூறப்பட்டது என்க.
வி-ரை:பழிப்பதுபோலப் புகழ் புலப்படுத்தற்கும் ,புகழாப் புகழச்சிக்கும் உரிய வேற்றுமை:-
பழிப்பதுபோலப் புகழ் புலப்படுத்தல் ஒன்றனையே பழித்தாற்போலப் புகழ்வதாகும். `ஆடல் மயிலியலி' என்ற பாடலில் `அன்பன் கூடுங்கால் மெல்லென் குறிப்பறியான்' என எந்தத் தலைவன் பழிப்பதுபோலக் கூறப்பட்டனோ, அந்தத் தலைவனே ஆண்மையும் இன்பச்செறிவும் அமைந்தவன் எனப் புகழப்படுதல் காண்க.
புகழாப் புகழ்ச்சி ஒன்றனைப் பழிக்க, வேறொன்றற்குப் புகழாய்த் தோன்றுவதாகும். `போர் வேலின்' என்று தொடங்கும் பாடலில் `செங்கண்மால் ஓரடிக்கீழ் வைத்த உலகு' என உலகைப்பழிக்க, அதனைக் காக்கும் முகத்தான் சோழனுக்குப் புகழாய்த் தோன்றல் காண்க.
புகழ்வதுபோலப் பழித்திறம் புனைதற்கும், மாறுபடு புகழ் நிலைக்கும் உரிய வேற்றுமை:-
புகழ்வதுபோலப் பழித்திறம் புனைதல், ஒன்றனையே புகழ்ந்தாற் போலப்பழிப்பது, 'மேய கலவி' என்று தொடங்கும் பாடவில் விடலை (தலைவன்)