இறுதி முற்றுமடக்கு எ - டு : | 'மாலை யருளாது வஞ்சியான் வஞ்சியான் | | மேலை யமரர் கடைவேலை வேலை | | வளையார் திரைமேல் வருமன்ன மன்ன | | இளையாள் இவளை வளை' |
இ - ள் ; வஞ்சிக் காவலன் தன் மார்பின் மாலை கொடாதே வஞ்சனை செய்து கொள்வானல்லன்; மேலாயுள்ள வானவர் திருப்பாற் கடலைக்கடைந்த காலத்துக் கரையினையும் சங்குகளையும் உடைய கடலில் தோன்றின திருமகளாகிய அன்னத்தை யொத்த பேதையாகிய இவளுடைய வளைகளை எ - று. இதில் நான்கடிகளின் ஈற்றிலும், 'வஞ்சியான் வஞ்சியான்' எனவும், 'வேலை வேலை' எனவும், 'மன்ன மன்ன' எனவும், 'வளை வளை' எனவும் மடக்குகள் வந்தமை காண்க. இவை அனைத்தும் ஓரிடத்தே மடங்கின. 'இவளை' என்பது வேற்றுமை மயக்கம். ஒழிந்த இறுதி மடக்கு வந்தவழிக் கண்டு கொள்க. (வி - ரை) வஞ்சியான் மாலை யருளாது வஞ்சியான் அல்லன் எனக் கூட்டுக. வஞ்சியான் - வஞ்சிக் காவலன்; சோழன். 'மறவேந்தன் வஞ்சியானல்லன்' என முன்னும் கூறியது காண்க. கடை வேலை - கடைந்த காலத்து. வேலை - காலம்; அஃது அன்னதாதல் 'மணந்தார் உயிருண்ணும் வேலை' (குறள் - 1221) என்றவிடத்தும் காண்க. அடுத்துள்ள வேலை என்னும் சொல், கடற்கரை என்னும் பொருளில் வந்தது. மூன்றாம் அடியிலுள்ள தொடரைத் திரைமேல் வரும் அன்னம் அன்ன எனப் பிரித்துப் பொருள் காண்க. நான்காம் அடியிலுள்ள இவளை வளை என்பது இவளுடைய வளை என்னும் பொருள்பட நின்றது. இவளை என்பதிலுள்ள இரண்டனுருபு, மூன்றாம் வேற்றுமைப் பொருள்பட நின்றது. ஒழிந்த இறுதிமடக்காவன : - ஓரடி இறுதி மடக்கு நான்கும், ஈரடி இறுதிமடக்கு ஆறும், மூவடி இறுதி மடக்கு நான்கும் ஆம். முதற்கண்ணும் இடைக்கண்ணும் முற்றுமடக்கு எ - டு ; | 'கொண்டல் கொண்டலர் பொழில்தொறும் | | பண்ணையாய்ப் பண்ணையா யத்துள்ளார் | | வண்டல் வண்டலர் தாதுகொண் | | டியற்றலின் வருமண மணன்முன்றில் | | கண்டல் கண்டக மகிழ்செய | | வோதிமங் கலந்துறை துறைவெள்ளம் | | மண்டல் மண்டல முழுதுடன் | | வளைதரு வளைதரு மணிவேலை' |
இ - ள் : கீழ்க்காற்று மோதுதலால் அலர்கின்ற சோலைதோறும், இசையை ஆராயும் விளையாடற் கூட்ட மகளிர் சிற்றிலை வண்டுகளரற்றிய தாதுக்களைக் கொண்டு செய்தலால், மணம் வீசும் மணல் முற்றமாகிய கைதை மீதே கண்டார் கண் களிகூரும்படி அன்னங்கள் கூடியிருக்கும் துறையில் வெள்ளத்தைக் கொண்டு ஏறாதொழிவாயாக; நிலவலயம் முழுதையும
|