பக்கம் எண் :
 
சொல்லணியியல்237

எ - டு :

'ஆதரந் துயர்தர வயர் தருங் கொடிக்குப்

பூதலம் புனைபுகழ் வளவன் - தாதறாத்

தாங்கரும் பாலன்றித் தணியுமோ தாரனங்கன்

பூங்கரும்பால் வந்தடுத்த போர்'

இ - ள் : ஆசையானது வருத்தத்தைத் தர அதனாலே வருந்துகிற பூங்கொடி போலும் மாதினுக்கு, பூமியை அலங்கரிக்கும்படியான புகழுள்ள சோழன் அணிந்திருக்கின்ற மகரந்தம் நீங்காத பூவரும்புகளால் ஆகிய மாலையாலன்றி, மாலையைத் தரித்த மன்மதனுடைய அழகிய கருப்பு வில்லால் வந்து சேர்ந்த போர்த் துன்பமானது தணியுமோ எ - று.

இது, முன்னர் ஆசிரியம் வந்து, பின்னர் வெண்பாவாய் முடிந்தது. இங்ஙனம் முடிதற்கு இலக்கணமின்மையால் யாப்பு வழுவாயிற்று.

(24)

மேலதற்கோர் சிறப்புவிதி

115. ஆரிடத் துள்ளும் அவைபோல் பவற்றுளும்
நேரும் என்ப நெறியுணர்ந் தோரே.

எ - ன், மேலதற்கு ஓர் சிறப்பு விதி உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள் : செய்யுள் வழு ஆரிடத்துள்ளும், ஆரிடப் போலியுள்ளும் சிறுபான்மை வரையப்படா எ - று.

எ - டு ;

'கண்டகம் பற்றிக் கடக மணிதுளங்க
ஒண்செங் 1குருதியு ளோஒ கிடப்பதே - கெண்டிக்
2கெழுதகைமை யில்லேன் கிடந்தூடப் பன்னாள்
அழுதகண் ணீர்துடைத்த கை'

இ - ள் : தலைவரது பிரிவால் கூட்டம் இல்லாத யான், அப்பிரிவுத்துன்பம் உடம்பை யறுத்துத் தின்னப் பூமியில் கிடந்து பிணங்கப் பலநாளும் அழுத கண்ணீரைத் துடைத்துத் துன்பம் போக்கிய எனது கை, வாளைப் பற்றிக்கொண்டு கடகத்தில் உள்ள இரத்தினம் ஒளிவிடச் சிவந்த இரத்தத்தினுள்ளேயோ தோய்ந்து கிடப்பது எ - று.

இது, பதினாறுசீர் வெண்பாவாய் யாப்பிலக்கணத்தோடு பொருந்தாது வந்தது.

ஆரிடமாவன - இருடிகளாற் சொல்லப்படுவன. ஆரிடப்போலியாவன - சாவவும், கெடவும், வாழவும், மனத்தது பாடவும் வல்ல புலவரால் சொல்லப்படுவனவாம்.

(வி - ரை) கெண்டி - வேறுபடுத்தி; அதாவது பிரிந்து என்றபடி.

(25)

(9) சந்திவழு

116. சந்தி வழுவே எழுத்திலக் கணத்துச்
சந்தியொடு முடியாத் தன்மைத் தாகும்.

எ - ன், நிறுத்த முறையானே சந்தி வழுவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.


1. 'குருதியி னோஒ கிடந்ததே' என்பதும், 2. 'கெழுதகையில்லேன்' என்பதும் பாடங்களாகும்.