பக்கம் எண் :
 
242தண்டியலங்காரம்

இ - ள் : ஐந்தாம் நரம்பாகிய பகை சாராது, ஆறாம் நரம்பாக வந்த கிளையைக் கொள்ள, நான்காம் நரம்பாகிய முதன்மைத்தான இணையைக் கொண்ட யாழை எந்திய ஆபரணங்களையுடைய பெண்ணானவள், தனது ஆவிக்குத் துணைவனாகிய தலைவனது புகழையே தொடுத்து வாசிப்பாள் எ - று.

இதனுள், நின்ற நரம்பிற்கு ஐந்தாவது கிளையாகலான், அதனைப் 'பகை' என்றும், ஆறாவது பகையாகலான், அதனைக் 'கிளை' என்றும், நான்காவது நட்பாகலான் அதனை 'இணை' என்று எட்டாவதன் பெயர் கொடுத்தும் சொன்னமையின், சங்கீதநூல் மலைவு ஆயிற்று. பிறவுமன்ன.

(வி - ரை) அறுபத்து நான்கு கலைகள் வருமாறு:-

அக்கர இலக்கணம், இலிகிதம், கணிதம், வேதம், புராணம், வியாகரணம், நீதி சாஸ்திரம், சோதிட சாஸ்திரம்,தரும சாஸ்திரம், யோக சாஸ்திரம், மந்திர சாஸ்திரம், சகுண சாஸ்திரம், சிற்ப சாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், உருவ சாஸ்திரம், இதிகாசம், காவியம், அலங்காரம், மதுரபாடனம், நாடகம், நிருத்தம், சத்தபிரமம், வீணை, வேணு, மிருதங்கம், தாளம், அத்திர பரீக்ஷை, கனக பரீக்ஷை, இரத பரீக்ஷை, கஜ பரீக்ஷை, அசுவ பரீக்ஷை, இரத்தின பரீக்ஷை, பூ பரீக்ஷை, சங்கிராம இலக்கணம், மல்ல யுத்தம், ஆகருஷணம், உச்சாடனம், வித்துவேஷணம், மதன சாஸ்திரம், மோகனம், வசீகரணம், இரசவாதம், காந்தர்வவாதம், பைபீலவாதம், கௌத்துக வாதம், தாதுவாதம், காருடம், நட்டம், முட்டி, ஆகாயப்பிரவேசம், ஆகாய கமனம், பரகாயப் பிரவேசம், அதிரிச்யம், இந்திர ஜாலம், மகேந்திர ஜாலம், அக்கினித்தம்பம், ஜலஸ்தம்பம், வாயுத்தம்பம், திட்டித்தம்பம், வாக்குத்தம்பம், சுக்கிலத்தம்பம், கன்னத்தம்பம், கட்கத்தம்பம், அவத்தைப் பிரயோகம் என்பன.

(4) உலக மலைவு

121. உலகெனப் படுவ(து)ஈண்(டு) ஒழுக்கின் மேற்றே.

எ - ன், உலகம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள் : உலகென்று சொல்லப்படுவது ஈண்டு ஒழுக்கத்தின் மேலது எ - று.

உலகு என்பது, மக்கள் மேலும், நிலத்தின் மேலும், ஒழுக்கத்தின் மேலும் நிற்கும் பலபொருள் ஒருசொல் ஆதலின், இவ்விடத்து ஒழுக்கத்தையே கோடற்கு 'ஈண்டு' என்று உரைக்கப்பட்டது. அவ்வொழுக்கம் எல்லாராலும் அறியக் கிடந்தமையான் இன்னதென்று பகுத்தெடுத்து உரைக்க வேண்டுவதில்லை.

அதன் மலைவாவது, உலகத்து ஒழுகலாற்றோடு மாறுபட்ட ஒழுக்கம் நிகழ்ந்தனவாகக் கூறுதல்.

எ - டு :

'அலைகடல்கள் ஏழுந்தூர்த்(து) அந்தரத்தி னூடே

மலையனைய மால்யானை யோட்டிக் - கலவாரை

நீறாக்கி வைய நெடுங்குடையின் கீழ்வைத்தான்

மாறாச்சீர் மாநிலத்தார் மன்'

இ - ள் : மாறாத சிறப்பினையுடைய பெரிய பூமியில் உள்ளார்க்குத் தலைவனாகிய வேந்தன், அலைகளையுடைய சமுத்திரங்கள் ஏழனையும் தூர்த்து, ஆகாயத்தின்ஊடே மலையை யொத்த தனது