பக்கம் எண் :
 
102இறையனார் அகப்பொருள்

வைத்த காலை யான’ என நின்றது. உம்மை இடைச்சொல்லாகலின் ஈறு
திரியும்;

     என்னை,
      
‘தம்மீறு திரிதலும் பிறிதவண் நிலையலும்
       அன்னவை யெல்லா முரிய வென்ப’       (இடையியல்-3)
என்பது இலக்கணமாகலான் என்பது.                            (16)

                      
சூத்திரம்-17

           அல்லகுறிப் படுதலும் அவ்வயின் உரித்தே
           அவன்வர வறியுங் குறிப்பின் ஆன.

என்பது என்னுதலி்ற்றோ எனின், இதுவும் களவினுள் இடையீடு ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

      இதன் பொருள்: அல்ல குறிப்படுதலும் என்பது-குறியில்லதனைக்
குறியாகக் கருதலும் என்றவாறு; குறியாமாறு போக்கிச் சொல்லுதும்;
அவ்வயின் உரித்தே என்பது-இதுவும் களவினுள் இடையீடாதற்கு உரித்து
என்றவாறு; அவன் வரவு அறியுங் குறிப்பின் ஆன என்பது-அவன்
வரவினை அறிவிக்குங் குறிப்பு அவனானன்றிப் பிறிதொன்றினான்
நிகழ்ந்தவிடத்து என்றவாறு.

      அஃதாமாறு, தலைமகன் இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற காலத்து
ஒருநாள், தலைமகன் செல்லாமே அவனாற் செய்யப்படுங் குறிப்புக்கள் தாமே
வெளிப்பட்டன. அவை புன்னைக்காய் நீரிலிடுதலும், புள்ளெழுப்புதலும் என
இவை.

      அவை வேறாய் நிகழுமாறு: புன்னைக்காய் மூக்கு ஊழ்த்தும் விழும்,
வளி எறியவும் விழும், புள் துளக்கவும் விழும்.

      புள் எழும்புமிடத்து வெருவியும் எழும், வேற்றுப்புள் வரவும் எழும்.
இவைகண்டு இவனின் ஆயின எனக் கருதிக்கொண்டு போந்து, அவ்விடம்
புகுந்து அவனினாகாமை உணர்ந்துபோந்து, மனையகம் புகுந்தபின்னை,
அவன் வந்து அக்குறி செய்யும்; செய்தக்கால் இரண்டாவது கொண்டுபோகல்
ஆகாதன்றே; என்னை, ‘சிறிது முன்னாகப் போனாரன்றே, அக் கை
புடைபெயராமைப் போகின்றார்’ என்று உற்றார் பின்நின்று ஆராய்தலான்
என்பது. அகத்தினின்று, ‘நின்னின் ஆகாதன கண்டு வந்து