பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - களவு 103
 

நின்று போந்தோம்’ என்பதனை அவனுக்கு உரைக்கும்,
திங்கண்மேலிட்டானும் அன்னத்தின்மேலிட்டானும் என்பது; அதற்குச்
செய்யுள்:

         
அல்லகுறிப்பாட்டினை அண்ணற்குணர்த்தல்

  ‘அறைவாய் அதிர்கழல் வேந்திகல் ஆற்றுக் குடியழித்த
  கறைவாய் இலங்கிலை வேல்மன்னன் கன்னியங் கானலின்வாய்
  இறைவாய் அணிவளை யாயென்னை கொல்லோ இரவினெல்லாம்
  துறைவா யிளம்புன்னை மேலன்னம் ஒன்றும் துயின்றிலவே.’   (137)

  ‘பூநின்ற வேல்மன்னன் பூலந்தை வான்புகப் பூட்டழித்த
  வேனின்ற வெஞ்சிலை வேந்தன் இரணாந் தகனறியும்
  பானின்ற இன்தமிழ் அன்னநல் லாய்நம்பைங் கானலின்வாய்த்
  தூநின்ற மென்சிறை அன்னம்இன் றொன்றுந் துயின்றிலவே.’  (138)


      ‘புன்னை நயப்பினும் பூஞ்சினை தோயினும்
      பின்னிருங் கூந்தலென் தோழி நடையொக்கும்
      அன்ன நனையாதி வாழி கடலோதம்.’
 
      ‘அரவளை மென்தோள் அனுங்கத் துறந்து
      கரவலம் என்றோரைக் கண்ட திலையால்
      இரவெலா நின்றாயால் ஈர்ங்கதிர்த் திங்காள்.’

    இவற்றுள் யாதானும் ஒன்றன்மேல் வைத்துச் சொல்ல; ‘இரவெலாம்
என்பாலாராய்நின்று துயிலாராயினார் போலும்; என்னை, தாம் துயிலாது
நின்றாரன்றே துயிலாதன அறிவார், இவற்றின் துயிலெழ வினையேன்

குறியென்று வந்து பெயர்ந்தார்போலும்’ என ஆற்றானாய்ப் பெயரும்.

பெயர்வான் இறந்து படானாயிற்று. எற்றிற்கோ எனின்? இறந்துபடானன்றே,
‘யான் இறந்துபடின் இவளும் இறந்துபடும்’ எனக் கருதி யென்பது. அவ்வகை
பெயர்வான் தன் நெஞ்சினை நெருங்கியதற்குச் செய்யுள்:

          
குறி யெதிர்பெறாது நெஞ்சொடு கூறல்
 

  ‘ஒளியார் திருநுத லாளை எளியள்என் றுள்ளிவந்து
  விளியா அருந்துயர் செய்தமை யால்விழி ஞத்துவென்ற
  களியார் களிற்றுக் கழல்நெடு மாறன் கடிமுனைமேல்

  தெளியா வயவரின் தேய்வாய் அளியவென் சிந்தனையே’     (139)

  ‘ஏரார் குழல்மட வாளை எளியள்என் றுன்னிவந்து
  தீரா விழுமம்தந் தாய்தென்னன் சேவூர்ச் செருஅடர்த்த
  காரார் களிற்றுக் கழல்மன்னர் மாறன் கழல்பணிந்து
  சேரா வயவரில் தேய்வாய் அளியஎன் சிந்தனையே’         (140)