பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - களவு 117
 

     அம்பல் என்பது, பெரும்போதாய்ச் சிறிது நிற்க அலரும் என நிற்பது.

     அலர் என்பது, அப் பெரும்போது தாதும் அல்லியும் வெளிப்பட
 மலர்ந்தாற்போல நிற்கும் நிலைமை யென வேற்றுமை சொல்லப்பட்டதாம்.

     தாம் நெடுங்காலம் இவ்வொழுக்கத்தை ஒழுகினாராதலான், வேறு
நின்று தங்கருமம் உசாவுவாரை உணர்ந்து, இத்தன்மைத்து இவர் ஆராய்வது
இதுபோலும் என்று கருதுப. தம்மனத்து ஒரு கோட்டமுடையார்
அப்பெற்றியே கருதுவது உலகத்துத் தன்மை; இவ்வொழுக்கம் பிறர்க்குப்
புலனாகாதன்றே தெய்வத்தினான் ஆயதாகலான்.

     அம்பலும் அலரும் எவ்விடத்து நிகழுமோ எனின் காப்புக்
கைமிக்கவிடத்து நிகழும் என்பது. களவினது நெடுங் காலத்துக்கண் இவ்
வொழுக்கம் வெளிப்படுங் கொல்லோ என்னும் அயிர்ப்பினான் நிகழும்
என்பது. ‘அங்ஙனம் அயிர்த்த அயிர்ப்பினாற் களவொழுக்கம் ஒழிந்துநின்ற
நிலைமை கற்பு என்று கொள்ளுவேனாயின், வரைந்து புகுந்ததின்மையிற்
கற்பு எனலும் ஆகாது; களவினகத்தென்று கொள்ளுவேனாயின், ஒழுக்கம்
நிகழ்கின்றின்மையிற் களவு எனலும் ஆகாது; என்னைகொல்லோ இதனை
ஒருபாற் சார்த்துமாறு?’ என்று ஐயப்பட்டு நின்ற மாணாக்கற்கு, அம்பலும்
அலரும் என்று நின்ற நிலைமையைக் களவின்பாலே கொள்க என்பது. இது
பொருந்தாது.

   என்னை,
       
‘தந்தை தாயே தன்னைய ரென்றாங்கு
        அன்னவ ரறியப் பண்பா கும்மே’         (இறையனார்-26)
என்றமையின். இவரறியாத முன்னெல்லாங் களவென்பது போதும்
என்பது.                                                    (22)

                       
சூத்திரம்-23

     வெளிப்பட்ட பின்றையும் உரிய கிளவி.

என்பது, என்னுதலிற்றோ எனின், அம்பலும் அலரும் ஆயிற்றென்று
உள்ளத்து வெளிப்பட்ட பின்றை நிகழற்பாலது உணர்த்துதல் நுதலிற்று.

    
இதன் பொருள்: ‘வெளிப்பட்ட பின்றையும் உரிய கிளவி’
என்றாரெனினும், வெளிப்பட்டபின்றைக் கிளவியும் உரிய என மொழிமாற்றிக்
கொள்க. கிளவி என்பது, மகட்கூறுதல்;