பக்கம் எண் :
 
128இறையனார் அகப்பொருள்

  ‘கொடுவிற் படைமன்னர் கோட்டாற் றழியக் கணையுகைத்த
  நெடுவில் தடக்கையெங் கோனெடு மாறன்தென் நேரிமுன்னால்
  இடுவிற் புருவத் தவள்நின்ற சூழல் இதுஉதுவாம்
  கடுவில் தொடுகணை யாலண்ணல் எய்த கதக்களிறே’.        (195)

     பின்சென்ற செவிலித்தாய் எதிர்வருவாரைக் கண்டு வினவ, அவ்
வினவப்பட்டார் தலைமகளையும் தலைமகனையும் இன்னதோரிடம்
சேர்வார்கள் என்னுமதற்குச் செய்யுள்:

                   
அழுங்குதாய்க்குரைத்தல்

  ‘ஆளையும் சீறும் களிற்றரி கேசரி தெவ்வரைப்போல்
  காளையும் காரிகை யுங்கடஞ் சென்றின்று காண்பர்வெண்கேழ்
  வாளையும் செங்கண் வராலும் மடலிளந் தெங்குகுத்த
  பாளையும் தேறல் பருகிக் கவிக்கும் பழனங்களே.’          (196)

  ‘நகுவா யனபல பெய்துள்ள நட்டாற் றருவரைபோன்
  றுகுவாய் மதக்களி றுந்திவென் றான்மனம் போன்றுயர்ந்த
  தொகுவா யனசுனை சேர்குன்றம் நீங்கலும் துன்னுவர்போய்ப்
  பகுவா யனபல வாளைகள் பாயும் பழனங்களே’.            (197)

      இடைச்சுரத்துப் புலம்புஞ் செவிலியை எதிர்வருவார் கண்டு
தெருட்டியதற்குச் செய்யுள்:

                      
உலகியல்புரைத்தல்

  ‘கடவரை காதல னோடு கடந்த கயல்நெடுங்கண்
  படவர வல்குலும் பாவைக் கிரங்கல்மின் பண்டுகெண்டை
  வடவரை மேல்வைத்த வானவன் மாறன் மலயமென்னுந்
  தடவரை தானே அணிந்தறி யாதுதண் சந்தனமே’.           (198)

  ‘வெந்நீர் அருஞ்சுரம் காளைபின் சென்றநும் மெல்லியன்மாட்
  டிந்நீர் மையினிரங் கன்மின் நறையாற் றிகலரசர்
  தந்நீர் அழிவித்த சத்ரு துரந்தரன் தண்குமரி
  முந்நீர் பயந்தால் அணியார் பிறரென்ப முத்தங்களே’.       (199)

  ‘நெருங்கடல் வேல்நெடு மாறன் நெடுங்களத் தன்றுவென்றான்
  பெருங்கடல் ஞாலத்துப் பெண்பிறந் தார்தம்பெற் றார்க்குதவார்
  இருங்கடல் போல் துயர் எய்தன்மின் ஈன்றன வென்றுமுந்நீர்க்
  கருங்கடல் வெண்சங் கணிந்தறி யாதண் கதிர்முத்தமே’.      (200)

    ‘எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழல்
    உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்
    நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக்
    குறிப்பேவல் செயல்மாலைக் கொளைநடை அந்தணீர்