வேளாளரையும் தழுவுதற்குச் சொன்னார் என்பது. அல்லாக்கால்,
‘வேந்துவினை இயற்கை பார்ப்பார்க்கும் உரித்து’ என்னார்மன் என்பது.
இவ்விருவர்க்கும் செய்யுள் மேற்காட்டிற்றே கொள்க.
(5)
சூத்திரம்-39
வேந்தர்க் குற்றுழி
பொருட்பிணிப் பிரிவென்று
ஆங்க இரண்டும் இழிந்தோர்க் குரிய.
என்பது என்னுதலிற்றோ எனின், வாணிகர்க்கும் வேளாளர்க்கும் உரியதோர்
பிரிவு உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொருள்: வேந்தர்க்கு உற்றுழி
என்பது-அரசர்க்கு உற்றுழி
என்றவாறு; பொருட்பிணிப் பிரிவு என்பது-பொருள் வேட்கையிற் பிரியும்
பிரிவு என்றவாறு; என்று என்பது, எண்ணுதற்குரியதோர் வாய்பாடு; ஆங்க
என்பது, அசைச்சொல்; இரண்டு என்பது, தொகை; உம்மை, முற்றும்மை;
இழிந்தோர்க்கு உரிய என்பது-வாணிகர்க்கும் வேளாளர்க்கும் கிழமையுடைய
என்றவாறு.
இழிவுபடச் சொல்லினாரால், இழிந்தார் என்பது பொருவிறப்பினொடு
மாறுகொள்ளும் எனின், கொள்ளாது. இந் நூல் உலகினோடு ஒத்தும்
ஒவ்வாதும் நடக்கின்றதாகலான் உலகியல் நோக்கிச் சாதிவகையான் இழிந்தார்
எனப்பட்டது. ஒழிந்தனவற்றாற் பொருவிறப்பு இவர்க்கும் ஒக்கும் என்பது.
அவற்றுள், வேந்தற்குற்றுழிப் பிரியுந் தலைமகன் தோழியால் தலைமகட்குப்
பிரிவுணர்த்துவித்துப் பிரியும்; அதற்குச் செய்யுள்:
வேந்தற்கு உற்றுழிப் பிரிவுணர்த்தல்
‘வாரார் முரசின் விரைசேர் மலர்முடி மன்னவற்காய்ச்
சேரார் முனைமிசைச் சேறலுற் றார்நமர் செந்நிலத்தை
ஓரா தெதிர்ந்தார் உடன்மீ துலாவி உருள்சிவந்த
தேரான் திருவளர் தென்புனல் நாடன்ன சேயிழையே.’
(242)
‘கன்னவில் தோள்மன்னன் தெம்முனை மேற்கல
வாரைவெல்வான்
வின்னவில் தோளன்பர் செல்வர் விசய சரிதனென்னும்
தென்னவன் சேரார் படநறை யாற்றுச் செருஅடர்த்த
மன்னவன் கூடல்வண் தீந்தமிழ் அன்ன மடமொழியே.’
(243) |