வினைமுற்றி நினைதல்
‘கடியார் இரும்பொழில் கண்ணன்று வாட்டியின் றுங்கலவார்
படியார் படரொடு மாமதில் மேல்வந்து பாரித்ததால்
வடியார் அயில்நெடு மாறன்எங் கோன்கொல்லி வண்டிமிர்பூங்
கொடியார் இடைமட மான்பிணை நோக்கி குழைமுகமே.’
(248)
‘கயவாய் மலர்போற் கருங்கண் பிறழவெண் தோடிலங்க
நயவார் முனைமிசைத் தோன்றின்று நட்டாற் றெதிர்ந்ததன்னை
வியவார் படையிட்டெண் காதஞ் செலச்சென்று மீன்திளைக்கும்
வயவாள் செறித்தஎங் கோன்வஞ்சி அன்னாள் மதிமுகமே.’ (249)
1‘தங்கிய ஒள்ளொளி யோலைய தாய்த்தட மாமதில்மேல்
2பொங்கிய வேந்தர் எரிமூழ்கத் தோன்றின்று போதுகள்மேல்
பைங்கயல் பாய்புனல் பாழிப்பற் றாரைப் பணித்ததென்னன்
செங்கய லோடு சிலையும் கிடந்த திருமுகமே.’
(250)
இதுகேட்ட தேர்ப்பாகன் விரைந்து கடாவுவானாவது பயன்.
இங்ஙனம் வினைமுற்றிய பின்னையன்றி முற்றாவிடத்துஞ் சொல்லுமோ
எனின், சொல்லான்;
என்னை,
‘கிழவி நிலையே வினையிடத்
துரையார்
வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்’
(கற்பியல்-45)
என்பதாகலான், வினைமுற்றிய பின்னையே சொல்லும் என்பது.
வேந்தர்க்குற்றுழிச் சென்று வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச்
சொல்லியதற்குச் செய்யுள்:
பாகற்குரைத்தல்
‘வென்றே களித்த செவ் வேல்நெடு மாறன்விண்
டார்முனைமேல்
சென்றே வினைமுற்றி மீண்டனம் காரும் சிறிதிருண்ட
தின்றே புகும்வண்ணம் ஊர்கதிண் தேரிள வஞ்சியென்ன
நின்றே வணங்கு நுடங்கிடை ஏழை நெடுநகர்க்கே.’
(251)
‘உலகுடன் நிழற்றிய தொலையா வெண்குடைக்
கடல்போல் தானைக் கலிமா வழுதி
வென்றமர் உழந்த வியன்பெரும் பாசறைச்
சென்றுவினை முடித்தனம் ஆயின் இன்றே
1. தங்கயல் ஒள். 2. பொங்கயல். |