கார்ப்பெயற் கெதிரிய
காண்டகு புறவில்
கணங்கொள் வண்டின் அஞ்சிறைத் தொழுதி
மணங்கமழ் முல்லை மாலை ஆர்ப்ப
உதுக்காண் வந்தன்று பொழுதே வல்விரைந்து
செல்க பாகநின் னல்வினை நெடுந்தேர்
வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை
பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும்
காய்நெல் படப்பை வாணன் சிறுகுடித்
தண்டலை கமழும் கூந்தல்
ஒண்தொடி மடந்தை தோள்இணை பெறவே.’
(அகம்-204)
இன்னும் பிறவுஞ் சொல்லும்; அதற்குச் செய்யுள்:
‘பட்டார் அகலல்குல் பாவையும் காணுங்கொல்
பாழிவெம்போர்
அட்டான் அரிகே சரியையம் ஆயிரம் யானைமுன்னாள்
இட்டான் மருகன்தென் னாட்டிருள் மேகங்கண் டீர்ம்புறவில்
கட்டார் கமழ்கண்ணி போல்மலர் கின்றன கார்ப்பிடவே.’
(252)
‘புரிந்தமெல் ஓதியை வாட்டுங்கொல் வல்லத்தும் போரெதிர்ந்தார்
இரிந்த வகைகண்ட வாள்மன்னன் தென்னாட் டிருஞ்சுருள்போய்
விரிந்த புதவங்கள் மேய்ந்துதம் மென்பிணை கையகலா
திரிந்ததிண் கோட்ட கலைமா உகளுஞ் செழும்புறவே.’
(253)
‘செறிகழல் வானவன் செம்பியன் மாறன்தென் னாடனைய
வெறிகமழ் கோதைகண் வேட்கை மிகுத்தன்று வெள்ளஞ்சென்ற
நெறிகெழு வெண்மணல் மேல்நெய்யிற் பால்விதிர்த் தன்னஅந்நுண்
பொறிகெழு வாரணம் பேடையை மேய்விக்கும் பூம்புறவே.’ (254)
‘ஆழித் திருமால் அதிசயற் காற்றுக் குடியுடைந்தார்
சூழிக் களிற்றின் துனைகதிண் தேர்துயர் தோன்றின்றுகாண்
கோழிக் குடுமியஞ் சேவல்தன் பேடையைக் கால்குடையாப்
பூழித் தலையிரை ஆர்வித்துத் தானிற்கும் பூம்புறவே.’
(255)
‘கைம்மாப் புறவின் சுவடு தொடர்ந்து கனல்விழிக்கும்
மொய்ம்மா மதக்களி வேழங்கள் பின்வர முன்னுகதேர்
நெய்ம்மாண் அயில்நெடு மாறன் நிறைபுனல் கூடலன்ன
மைம்மாண் குழலாள் பரமன்று வானிடை வார்புயலே.’
(256)
‘முன்றா னுறத்தா வடிமுள் உறீஇமுடு காதுதிண்தேர்
என்றால் இழைத்தவற் றோடிற்றை நாளும் இழைக்குங்கொலாம்
ஒன்றா வயவர்தென் பாழிப் படவொளி வேல்வலத்தால்
வென்றான் விசாரிதன் தென்புனல் நாடன்ன மெல்லியலே.’
(257)
இவை யெல்லாஞ் சொல்லக் கேட்ட தேர்ப்பாகன்
கடிது கடாவுவானாவது
பயன். |