பக்கம் எண் :
 
170இறையனார் அகப்பொருள்

      இதுவும் மேலதனோடு ஒக்கும்.

      இனித், தோழி தலைமகனை, ’நீர் பிரிந்தவிடத்து இவ்வகை
நெடியவாகிய கங்குல்களைத் தமியளாய் எவ்வகை நீந்தி ஆற்றும்?’ என்னும்;
அதற்குச் செய்யுள்:

                  
கங்குல்மிசை வைத்தல்

  ‘வருநெடுங் கங்குலெவ் வாறிவள் நீந்தும்வல் லத்துவென்ற
  செருநெடுந் தானையெங் கோன்தெவ்வர் போலச்சென்
                                          றத்தமென்னும்
  ஒருநெடுங் குன்றம் மறைந்துல கெல்லாம் உலாய்க்குணபால்
  திருநெடுங் குன்றம் கடந்தால் வருவது செஞ்சுடரே.’         (268)

  ‘படந்தாழ் பணைமுக யானைப் பராங்குசன் பாழிவென்ற
  விடந்தாழ் சிலைமன்னன் வெல்களம் போல விரிந்தஅந்தி
  நடந்தால் இடையிருள் போய்க்கடை யாமநல் லூழிமெல்லக்
  கடந்தால் அதற்பின்னை அன்றே வருவது காய்கதிரே.’      (269)
 

     இதுவும் அது.

     தோழி தலைமகற்குப் பிரிவு நேர்ந்து, ‘நன்று செய்தாய், அவர்
செல்லுங் கானம் இவ்வகைப்பட்டது’ என்னும்; அதற்குச் செய்யுள் 

               
கானத்தியல்பு தோழியுரைத்தல்

  ‘தேனக்க தாரவர் காண்பர்செல் லாரவர் செல்லஓட்டி
  நானக் குழல்மங்கை நன்றுசெய் தாய்வென்று வாய்கனிந்த
  மானக் கதிர்வேல் வரோதயன் கொல்லி வரையணைந்த
  கானத் திடைப்பிடி கையக லாத கருங்களிறே.’             (270)

      இனித், தோழி தலைமகட்குப், ‘பொருள்முடித்து வந்தான்
எம்பெருமான்’ என்னும்; அதற்குச் செய்யுள்:

               
தலைமகன் வரவு தோழி கூறல்

  ‘இருள்மன்னு மேகமும் கார்செய் தெழுந்தன எல்வளையாய்
  மருள்மன்னு வண்டறை தாரவர் தாமுமிம் மாநிலத்தார்க்
  கருள்மன்னு செங்கோல் அரிகே சரிஅந்தண் கூடலன்ன
  பொருள் மன்னும் எய்திப் புகுந்தனர் வந்துநம் பொன்னகர்க்கே.’

      மற்றும், இவ்விடத்துப் பிரிவிடை மெலிந்து ஆற்றாளாகிய
தலைமகளைப் பருவம் வந்ததென்று வற்புறுப்ப, வன்பொறை யெதிரழிந்து
சொல்லியதற்குச் செய்யுள்: