பொறாமை நீங்கத் தோழி புகறல்
‘இழுது நிணந்தின் றிருஞ்சிறைத் தெம்மன்ன ரின்குருதி
கழுது படியக்கண் டான்கன்னி யன்னமின் னேரிடையாய்
அழுது சுவற்சென்ற வக்கரை யானொடும் வந்தமையால்
தொழுது வழிபடற் பாலை பிழைப்பெண்ணல் தோன்றலையே.’ (275)
‘வாரார் சிறுபறை பூண்டு மணிக்கா சுடுத்துத்தந்தை
பேரான் சுவலின் இருப்பவந் தான்பிழைப் பெண்ணப்பெறாய்
நேரா வயவர் நெடுங்களத் தோடநெய் வேல்நினைந்த
பாரார் புகழ்மன்னன் தென்புனல் நாடன்ன பல்வளையே.’ (276)
இது மேலதனோடு ஒக்கும் பொருட்டு.
மகன் வாயிலாகப் புக்கவிடத்துத் தலைமகள் சிவப்பாற்றினாள்; அது
குறிப்பறிந்து தோழி
தலைமகற்கு இந்நிலைமையளாயினாள் என்னும்;
அதற்குச் செய்யுள்:
தலைவி ஆறியது தோழி கூறல்
‘விடைமணிப் பூண்மன்னர் ஓட விழிஞத்து வென்றவன்தாட்
புடைமணி யானையி னான்கன்னி அன்னாள் பொருகயற்கண்
உடைமணி யானொடு நீவர ஊடற் சிவப்பொழிந்து
மடைமணி நீலத் தணிநிறங் கொண்டு மலர்ந்தனவே.’ (277)
பரத்தையிற் பிரிந்த தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து
தலைமகளைப் பொறாமை நீக்கத்
தலைமகள் பொறாமை நீங்குவாள்
சொல்லியதற்குச் செய்யுள்:
புனலாட்டிய ஈரம் புலர்த்தி வருகென்றல்
‘பங்கயப் பூம்புனல் நாடன் பராங்குசன் பாழியொன்னார்
மங்கையர்க் கல்லல்கண் டான்மணி நீர்வையை வார்துறைவா
எங்கையைத் தீம்புனல் ஆட்டிய ஈரம் புலர்த்திவந்தும்
அங்கையிற் சீறடி தீண்டிச்செய் யீர்செய்யும் ஆரருளே.’ (278)
இஃது என்சொல்லியவாறோ எனின், ’நீர் நெருநல் நுங் காதலியைப்
புனலாட்டிய ஈரம் புலர்த்திவந்து
எமக்குச் செய்யும் ஆரருள் செய்யீர்’
என்றாள் என்பது. (7)
|