பக்கம் எண் :
 
196இறையனார் அகப்பொருள்

      ‘கானங் கோழிக் கவர்குரற் சேவல்
      ஒண்பொறி எருத்தின் தண்சிதர் உறைப்பப்
      புதல்நீர் வாரும் பூநாறு புறவிற்
      சீறூ ரோளே மடந்தை வேறூர்
      வேந்துவிடு தொழிலொடு செலினும்
      சேர்ந்துவரல் அறியாது செம்மல் தேரே.’          (குறுந்-242)

      மற்றுங் கற்புக்காலத்துக் கிளவிகள் இது நிலமாகக்
 கொள்ளப்படுவனவெல்லாம் அறிந்துகொள்க.                        (20)


சூத்திரம்-54


    வன்புறை குறித்த வாயில் எல்லாம்
    அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றிற்
    சிறைப்புறங் குறித்தன் றென்மனார் புலவர்.

என்பது என்னுதலிற்றோ எனின், மேற் சூத்திரத்து ஆற்றுவித்துக்
கொண்டிருக்குமாறு உணர்த்திப் போந்தார், இனித், தலைமகன்
பிரிவெடுத்துக்கொண்டு பிரியுமிடத்து வாயில்களுக்கு உணர்த்த, வாயில்கள்
தலைமகட்குப் பிரிவுணர்த்தத், தலைமகளது வாயில்களாமிடத்துச்
சிறைபுறத்தானாக அவன் கேட்கும் அணிமைக்கண் உணர்த்துக என்பது
உணர்த்துதல் நுதலிற்று; என்பாரும்,

     இனித், தலைமகனது பிரிவின்கண் தலைமகள் ஆற்றாளாயின விடத்துச்
சிறைப்புறங் கூறியும் ஆற்றுவிக்க என்பது உணர்த்துதல் நுதலிற்று என்பாரும்
உளர்.

இதன் பொருள்: வன்புறை குறித்த வாயிலெல்லாம் என்பது-தலைமகளை
ஆற்றுவிக்கும் வகையால் ஆற்றுவித்தற்குரிய வாயிலெல்லாம், என்றவாறு;
அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றின் என்பது - தலைமகன் பிரிவின்கண்
தலைமகள் ஆற்றாளாயினவிடத்து, என்றவாறு; என்பது அவ்விடத்து
வாயில்கள் ஆற்றுவிக்கற்பால, ஆற்றுவிக்ககில்லாதவிடத்து; சிறைப்புறம்
குறித்தன்று என்மனார் புலவர் என்பது - சிறைப்புறத்துக்கண்ணுறுத்து
ஆற்றுவிக்க எனச் சொல்லுவர் கற்று வல்லோர் என்றவாறு.

     ‘சிறைப்புறங் குறித்தன்று’ என்பது, கற்பெனப்பட்ட சிறைமேல் வைத்து
ஆற்றுவித்தல் என்பது. அஃதாமாறு, மேற்சொல்லின முறையானெல்லாம்
ஆற்றுவிப்பவும் ஆற்றாளாய்நின்ற தலைமகளை இவ்வாற்றானே ஆற்றுவித்துக்
காண்பன் எனக் கருதி,