பக்கம் எண் :
 
60இறையனார் அகப்பொருள்

                       சூத்திரம்-4

           அவ்வியல் பல்லது கூட்டக் கூடல்
           எவ்விடத் தானுங் களவிற் கில்லை.


என்பது என்னுதலிற்றோ எனின், இந்நூலகத்துக் களவினது இலக்கணத்தையும்
கற்பினது இலக்கணத்தையும் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

      சூத்திரக் கிடக்கை நான்கு வகைப்படும்; ஆற்றொழுக்கு,
அரிமாநோக்கு, தவளைப் பாய்த்து, பருந்துவீழ்க்காடு என. அவற்றுள்,
ஆற்றொழுக்கு என்னும் சூத்திரக் கிடக்கை, ஆற்றுநீர் தொடர்பறாது
ஒழுகுமாறுபோலச் சூத்திரங்களும் தம்முள் இயைபுபடக் கிடப்பது.
 

      அரிமாநோக்கு என்பது சிங்கம் நோக்குமிடத்து முன்னையாரையும்
பின்னையாரையும் நோக்குவதுபோல, இறந்ததனோடும் எதிர்வதனோடும்
இயைபுபடக் கிடப்பது.

      தவளைப் பாய்த்து என்பது, தவளை பாய்கின்றுழி இடை
நிலங்கிடப்பப் பாய்வதுபோலச் சூத்திரம் இடையிட்டுப்போய்
இயைபுகொள்வது.

      பருந்தின் வீழ்க்காடு என்பது, பருந்து வீழ்கின்றுழி நடுவே வீழ்ந்து
தான் கருதினபொருள் கொண்டுபோம், அதுபோல இதுவும் தான் கருதி
முடிக்கின்ற பொருளை முடித்துப்போம் இயைபின்றியே என்பது.
இஃது அவற்றுள் அரிமாநோக்கு என்பது, என்னோ காரண மெனின், இறந்த
பாங்கற் கூட்டத்தினையும் நோக்கி, வருகின்ற தோழியிற் கூட்டத்தினையும்
கற்பினையும் எல்லாம் நோக்கினமையின் என்பது.

     
இதன் பொருள்: அவ்வியல்பு அல்லது என்பது-மேற்சொல்லப்பட்ட
இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த இயல்பல்லது என்றவாறு; கூட்டக்கூடல்
என்பது-ஒருவர் இடை நின்று புணர்ப்பார் உண்டாகப் புணர்தல் என்றவாறு;
எவ்விடத்தானும் களவிற்கு இல்லை என்பது- எந்நேரத்துக்கண்ணுங்
களவெனப்பட்ட ஒழுக்கத்திற்கு இல்லை என்றவாறு.

      எனவே, உலகினுள் ஒருவனோடு ஒருத்தியிடை நிகழும் ஒழுக்கமன்று,
உலகினுட் கூட்டவும் நிகழ்ந்து, கூட்டாமையும்