பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - களவு 61
 

நிகழ்தல் உடைமையால்; இது புலவரால் நாட்டப்பட்ட ஒழுக்கம் என்பது
அறிவிக்கப்பட்டது என்பது.

     ‘
கூட்டக் கூடல் எவ்விடத்தானும் களவிற்கில்லை’ எனவே
கூட்டாமைக் கூடலே உரியது என்பதாம்.

     தலைமகன் உலாப்போயின இடத்துப் பரத்தைமாட்டுப் பிரிந்தான்
என்று கருதி ஒரு சிவப்பு உண்டாம். அச் சிவப்பு நீக்கி வாயில்கள்
கூட்டவே கூடும் என்பது. அஃதேயெனின், இஃதன்றே 1
நெடுந்தொகைப்
பாட்டினுள் கூர்முண் முள்ளி கூட்டாமற் கூடிற்று எனின்
? அதுவும்
கூட்டவே கூடிற்று. எவ்வாயிலாற் கூடினானோ எனின், ஆற்றாமைவாயிலாற்
கூடினானாம், கூடினவாறு அதனகத்துக் கண்டுகொள்க. அஃதேயெனின்,
களவினிற், ‘கூட்டக்கூடலில்லை என்றது எற்றிற்கு? அதுவும் ஆற்றாமை
கூட்டக் கூடுப என்னாமோ எனின், அங்கு ஆற்றாமை கூட்டுமெனினும்
வாயில் இலக்கணமின்று; இங்கு வாயில் இலக்கணமுடைத்து. என்னை,
வாயில்களும் அவளது பொறாமையை நீக்குவதன்றே செய்வது. இதுவும்

அவளது பொறாமையை நீக்கினமையின் அமையாதோ எனின், அமையாது;
இங்கு வாயிலிலக்கணம் உடைத்தாகலின் அமையும் என்பது.

     ‘அவ்வியல்பு அல்லது கூட்டக்கூடல் களவிற்கு’ இல்லை என
அமையும், ‘எவ்விடத்தானும்’ என்றது எற்றிற்கோ எனின், உணர்த்த
உணர்தல் ஓரிடத்து உண்டு என்றற்குச் சொல்லினார். யார் உணர்த்த யார்
உணர்பவோ எனின், தோழி உணர்ந்தமை தலைமகன் உணர்த்தத் தலைமகள்
உணரும் என்பது. அஃது ஆமாறு:

      பகற்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகன் புணர்ச்சியது இறுதிக்கண்
ஒருநாள் தலைமகளைக் கோலஞ்செய்தான். செய்ய, அவள் இறப்ப
நாணினாள். நாணத், தலைமகன் கருதுவான்: ‘யான் செய்கின்றது இயற்கைக் கோலம் அல்லது போலும் என்றாம் இவள் வேறுபடுகின்றது’ என உணர்ந்து, அவளை ஆற்றுவித்தற்கு, ‘நின் தோழி செய்யுமாறே கோலஞ் செய்தேன்’ எனச் சொல்லும். சொல்ல, ஒக்கும்; ‘என் தோழியோடு தலைப்பெய்துடையர் போலும்’ என உணர்வாள் ஆவது.


      அவ்வாறு உணர்ந்தாள் பெருநாணினள் ஆகலான் இறந்து படாளோ எனின், இறந்துபடாள்; இவளைத் தன்னின் வேறன்றிக் கருதும் ஆகலின். வேறன்றிக் கருதும் எனின், இவ்வொழுக்கந்தன்னை உணர்த்த அமையாதோ; எனின், உணர்த்தாள்;


     
(பாடம்) 1. அகநானூறு 26.