பக்கம் எண் :
 
62இறையனார் அகப்பொருள்

யான் காவற் குற்றப்பட்டேன் எனத் தோழி கவலுமாகலான். தலைமகள்
உணர்த்தியதனாற் பயன் என்னோ எனின், நெடுங்காலம் ஒழுகக் கருதுவான்,
யான் பிரிந்தபோது இவளை ஆற்று வித்துக்கொண்டு இருக்கும்
என்பதனானும்; ‘
ஒருநாள் இதனையறியும், அறிந்தக்கால் கதுமென
ஆற்றாளாங்கொல்லோ
என்பதனானும், இவ்வாறு உணர்த்தல் ஆற்றுதற்குக்
காரணமாம் என்பதனானும் உணர்த்தும்.

      இது பொருந்தாது என்ப ஒரு சாரார்; என்னை, பகற்குறிக்கண் இது
நிகழுந்துணையும் நடவாது; இவ்வகை வந்த சான்றோர் செய்யுளும் இல்லை.
இதனானே, ‘
எவ்விடத்தானும் என்பது, நன்று மறுத்தற்குச் சொல்லப்பட்டது;
மிகையன்று என்பது. ‘
கூட்டக் கூடல், களவிற்கு இல்லை’ என்றிரால்,
பாங்கற் கூட்டம், தோழியிற்கூட்டம் என்று பேரிட்டது எற்றிற்கோ எனின்,
அவர் துணையாயினமையின் அவ்வாறு சொல்லப்பட்டது, துணையாயினாரைக்
கூட்டினார் என்னாமோ எனின், என்னாம்; கூடும் இருவரும்
அக்கருத்தினர்அல்லராகலான்என்பது.                   (4)
 

                        சூத்திரம்-5


     
 புணர்ந்த பின்றை யாங்ஙனம் ஒழுகாது
      பணிந்த மொழியால் தோழி தேஎத்து
      இரந்துகுறை யுறுதலுங் கிழவோன் மேற்றே.


என்பது என் நுதலிற்றோ எனின், பாங்கனானாதல், தமியாளை இடத்து எதிர்பட்டாதல் புணர்ந்த தலைமகன், அதன் பின்னே தெருண்டு வரைதல் தலை; அல்லாவிடின், இவ்வாறு ஒழுகும் என்று, அவன் ஒழுகுந் திறம் உணர்த்துதல் நுதலிற்று.


      இதன் பொருள்: புணர்ந்த பின்றை என்பது-பாங்கனானானும் தமியாளை இடத்து எதிர்ப்பட்டானும் புணர்ந்த பின்றை என்றவாறு; ஆங்ஙனம் ஒழுகாது என்பது-பிற்றைஞான்றும் அப்பெற்றியே ஒழுகாது என்றவாறு; பணிந்த மொழியான் என்பது-இழிந்த சொற்களான் என்றவாறு; இழிந்த சொல் என்பது, வாய்பாட்டு இன்னாமை நோக்கிப் பணிந்த மொழி எனப்பட்டது! பணிந்த மொழியன்றே, ‘இத்தழை நல்ல, இக்கண்ணி நல்ல’ என்று இங்ஙனம் கையுறை பாராட்டிச் சென்று நிற்றல்; தனக்குத் தகாது, இழிந்தார்க்கன்றே அஃது உரியது என்பது; தோழி தேஎத்து என்பது - தோழிமாட்டு என்ற