மென்று குற்றந்தோற்றலும், தன்னைக் காப்பதுவேண்டி யெதிர்த்த பகைவரைக் கொல்வது வீரமென்று குற்றங்காத்தலு, மென்றிருவகைவழக் கெனப்படும். தேற்றப் பயனாவது:- குறித்ததொழிலைச் செய்யத்தகுவதோ தகாததோவென வையந்தோன்றி யிரண்டி லொன்றைத் தான்றெரிந்ததுவே தகுவதென்பதாயினுந் தகாததென்பதாயினும் விரிவாகக்காட்டி யையந்தீர்ந்ததை யணுகவு மகற்றவு முள்ளந்தேறுதற் கேற்பக்கூறலென் றிருவகைத் தேற்ற மென்றவாறு. அங்ஙனம் மேன்மையோர்க்கும் பணிதற்றகுமோ தகாதோவென வையந் தோன்றித் தகுமெனப் பலவற்றைக்கொண்டு காட்டிப் பணிவதற் கனைவருந்துணியத் தேற்றலும், தேடியபொருளை நம்பத்தகுமோ தகாதோவென வையந்தோன்றித் தகாதென விரித்துக் காட்டியவற்றை நம்பாததற்குத்தேற்றலும் இருவகைத் தேற்ற மெனப்படும். தோற்றப் பயனாவது:- எடுத்தபொருட் குணந்தோற்ற விளக்கி நல்லவை புகழ்தலு மல்லவை யிகழ்தலுமென் றிருவகைப்படுந் தோற்றமென்றவாறு. அங்ஙன மிகப்பொருட் செல்வன் பிறர்க்கீய்ந்தில்லானாகியு மற்றிரந்தீகை வழங்கினா னென்றிவன்கொடையி னருமை தோன்ற விளக்கிப்புகழ்தலும், தன்றாய்ப் பசி கண்டாற்றா துண்டா னென்றிவன் கொடுமை தோன்றவிளக்கி யிகழ்தலும், என விவை யிருவகைத் தோற்ற மெனப்படும். ஆகையில் நீதிதன் முறைவழங்கல் வழக்கின் கருத்தும், ஐயந்தீர்ந் தொன்றிற்றுணிதற் றேற் றக்கருத்தும், தீயவு நல்லவும் விளக்கற்றோற்றக்கருத்து மாமெனக்கொள்க. இம்மூவகைப்பொரு டனித்தனி வழங்கு மாயினுஞ் சிலவழி யிரண்டுங் கூடிவருமெனக் கொள்க. அங்ஙன மேலே சொல்லப்பட்டபடி இரந்தீய்ந்த வள்ளலருங் கொடை தோற்றிப் புகழுங் காலை, வரையாதீதற் கேனையவருந் துணியும்படியே தேற்றுத லுணர்ந்துபேசி லிதுவே தோற்றமுந் தேற்றமு மொருப்பட வழங்குமா றெனக் கொள்க. பிறவுமன்ன. சொன்ன விம் மூவகைப் பொருளும் இயற்றமிழானும் இசைத்தமிழானும் வேறு பாடின்றி வழங்கும். இவற்றிற் கெல்லாம் பொது விதியாக வதற்கதன் குறிப்பின் றகவதாயபயனை யடையும் வழியைக்காட்டல் இவ்வதிகார நூறரும் பயனெனக் கொள்க. எ-று. (6) | | முதலாமோத்து:- பதிகம். Ascription. | | | 147. | பதிகங் காரணம் பாவு தொகைதுணி வைந்து மெலாப்பொருட் காம்பொது வழியே. | | | (இ-ள்.) சொற்பொருள் பயன்படப் பொதுவழியா மாறுணர்த்துதும். சொன்ன மூவகைப் பொருளுங் கருதியபயனையடைய சொல்லத்தகும் பொதுவழி யாதோவெனில் பதிகமும், காரணமும், பாவும், தொகையும், |
|
|