|              203.  |             எழுத்தசை சீர்தளை யடிதொடை யாறும்             வழுத்திய செய்யுண் மருவுறுப் பெனவே.   |                                           |                |             (இ-ள்.) நிறுத்தமுறையானே செய்யுட் குறிப்பிலக்கண மாமாறுணர்த்துதும்.       எழுத்தும்,       அசையும், சீரும், தளையும், அடியும், தொடையும், என் றிவ்வாறுஞ் செய்யுட்       குறுப்பாம்.       இவற்றுளெழுத்துத் தத்த மதிகாரத்திற் கூறியவதனா லிங்ஙனமற்       றைந்தினையும் விளக்குதும்.       - யாப்பருங்கலம். - "எழுத்தசை சீர்தளை       யடிதொடைதூக்கோ, டிழுக்காநடைய தியாப்பெனப்       படுமே." இதுமேற்கோள். எ-று. (2)    |                |        அசையிலக்ணம் வருமாறு:-       Metrical Syllables.    |                                                            |              204.  |             அசையே நேர்நிரை யாமிரு வகைய             நெடிறனிக் குறின்மெய் நிகழ்குறி னேரா             யிணைக்குறில் குறினெடி லிவைநிரை யசையே.   |                                           |                           (இ-ள்.) நிறுத்த முறையானே யசையிலக்கண மாமாறுணர்த்துதும். அசை       யெனப்படுவன நேரசை, நிரையசை,       என விருவகைப் படும். - யாப்பருங்கலம். -       "நேரசையென்றா நிரையசையென்றா, வாயிரண்டாகி       யடங்குமன் னசையே." இவற்றுள்       தனித்துநிற்பது நேரசை, இணைந்துநிற்பது நிரையசை. ஆகலின்       நெட்டெழுத் தெல்லாந்       தனியே வரினும் ஒற்றடுத்து வரினும் குற்றெழுத்து மொழியீற்றின்கட்       டனியே வரினும்       ஒற்றடுத்து வரினும் இந்நால்வகையா னேரசை வருமெனக் கொள்க. (வரலாறு.)       ஆழி,       என்னு மொழியில், நெடிலுங் குறிலுந் தனித்து நேரசை யாயின. ஆம்பல், என்னு       மொழியில், நெடிலுங்குறிலு மொற்றடுத்து நேரசையாயின. - யாப்பருங்கலம். -       "நெடில்குறிறனியாய்       நின்றுமொற்றடுத்து, நடைபெறுநேரசை நால் வகையானே."       இதுமேற்கோள். அன்றியுந் தனிக்குறின்       மொழிக்கு முதனேரசை யாகாது,       விட்டிசைத்தவழி நேரசையாகும். அஃதென்னை.- தொல்காப்பியம்.       -       "தனிக்குறின்முதலசைமொழிசிதைந்தாகாது." காரிகை. "விட்டிசைத் தல்லான் முதற்கட்       டனிக்குறினேரசையென், றொட்டப்படாததற் குண்ணானு தாரண மோசை குன்றா, நெட்       டளபாய்விடி       னேர்நேர்நி ரையொடு நேரசையா, மிட்டத்தினாற்குறில்       சேரினிலக்கியமேர்சிதைவே."       யாப்பருங்கலம். - "குறிப்பே யேவறற்சுட்டல்வழித்,       தனிக்குறின்மொழிமு தறனியசையிலவே."       என்றார்பலரும். (வ-று.) நாலடியார். -       "உண்ணானொளி நிறனோங்குபுகழ்செய்யான், றுன்னருங்கேளீர்       துயர்களையான் -       கொன்னே, வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ, விழந்தானென்       றெண்ணப்படும்."       இதனுள் அஆவென்புழி, அருளின்கட்குறிப்பாய் விட்டிசைத்துவந்த       குற்றெழுத்து மொழிமுதற்கண்       ணேரசை யாயிற்று "அ அவனும், இ இவனும், |              
			
				
				 | 
				 
			 		
			 |