உ உவனுங் கூடியக்கால் எ எவனை வெல்லாரிகல்." எ-ம். வரும். - மயேச்சுரர்யாப்பு. - "ஏவல்குறிப்பே தற்சுட்டல்வழி, யாவையுந் தனிக்குறின்முத லசை யாகா, சுட்டினும் வினாவினு முயிர்வருங் காலை, யொட்டிவரூஉமொருசாரு முளவே." இதுமேற்கோள். குறிலிணைந்துவரினும், குறினெடி லிணை ந்துவரினும், குறிலிணைந் தொற்றடுத்துவரினும், குறினெடிலிணைந் தொற்றடு த்துவரினும், இந்நால்வகையா னிரையசை வருமெனக் கொள்க. (வ-று.) வெறி, சுறா, இம்மொழிகள் குறி லிணைந்தும் குறினெடி லிணைந்தும், நிரையசை யாயின. நிறம், விளாம், இம்மொழிகள் குறி லிணைந்தொற்றடுத்தும் குறினெடி லிணைந்தொற்றடுத்தும், நிரையசையாயின. - யாப்பருங்கலம். - "குறிலிணை குறினெடி றனித்து மொற்றடுத்து, நெறிமை யினான்காய் வருநிரை யசையே" தொல்காப்பியம். - "குறிலே நெடிலே குறிலிணை குறினெடி, லொற்றொடு வருத லொடு மெய்ப் பட நாடி, நேரு நிரையு மென்றிசி னோரே." இவை மேற்கோள். எ-று. (3) | சீரிலக்கணம் வருமாறு:- Metrical Feet. | 205. | நேரே நிரையே யசைச்சீ ரிரண்டென நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை யீரசை யியற்சீ ரீரிரண் டிவற்றோ டீற்றுறு நேர்நிரை யிருநான் குரிச்சீர் நேரிறும் வெண்சீர் நிரையிறும் வஞ்சிச்சீர் நாலசை பொதுச்சீர் நானான் கென்ப. | | (இ-ள்.) நிறுத்தமுறையானே சீரிலக்கண மாமாறுணர்த்துதும். கூறிய விருவகை யசையே சிறுபான்மை தனித்தும் பெரும்பான்மை யிணைந்துஞ் சீராம். இவையே, அசைச்சீர், இயற்சீர், உரிச்சீர், பொதுச்சீர், என நால்வகைப்படும். இவற்றுளசைச்சீ ரோரசைச்சீராய் நேரசைச்சீரு நிரையசைச் சீருமென விரண்டாகும். இவற்றிற் குதாரணவாய்பாடு. நேர், நாள், நிரை, மலர். இவை பெரும்பாலும் வெண்பா வினீற்றிலுஞ் சிறுபான்மை யொழிந்தவற் றுள்ளும் வரும். (வ-று.) "மலர்மிசையேகினான் மாணடிசேர்ந்தார், நிலமிசை நீடு வாழ்வார். - கற்றதனா லாயபய னென்கொல் வாலறிவ, னற்றா டொழா அரெனின்." இக்குறள் வெண்பாக்களி னிறுதியில், வார், நாள், எ-ம். ரெனில், மலர், எ-ம். ஓரசைச் சீரிரண்டும் வந்தன காண்க. - யாப்பருங்கலம் - "ஓரசைச்சீரு மஃதோ ரிருவகைத்தே." என்றார்; அன்றியும் இயற்சீரீரசைச் சீராய், நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை, எனநான்காகும். இவற்றிற் குதாரணவாய்பாடு, நேர்நேர், தேமா; நிரைநேர், புளிமா; நிரைநிரை, கருவிளம்; நேர்நிரை, கூவிளம்; இவை யகவலுக்கே யுரியவாகி இயற் சீரெனவு |
|
|