எண் செய்யுள்:- பாட்டுடைத்தலைவன் தூரினையும் பெயரினையும் பத்துமுத லாயிர மளவும்பாடி யெண்ணாற் பெயர் பெறுவது. |
ஒலியலந்தாதி:- பதினாறுகலை யோரடியாக வைத்திங்ஙன நாலடிக் கறுபத்து நாலுகலை வகுத்துப் பல சந்தமாக வண்ணமுங் கலைவைப்புந் தவறாம லந்தாதித்து முப்பது செய்யுட் பாடுவது. சிறுபான்மை யெட்டுக் கலையானும் வரப் பெறும். அன்றியும், வெண்பா - அகவல் - கலித்துறை - ஆகிய விம்மூன்றையும் பப்பத்தாக வந்தாதித்துப் பாடுவதுமாம். |
பதிற்றந்தாதி:- பத்துவெண்பா பத்துக்கலித்துறைப் பொருட்டன் மை தோன்ற வந்தாதித்துப் பாடுவது. |
நூற்றந்தாதி:- நூறுவெண்பாவினாலேனு நூறுகலித்துறையினாலேனு மந்தாதித் தொடையாற் கூறுவது. |
வளமடல்:- அறம்பொரு ளின்பமாகிய வம்முக் கூறுபாட்டின் பய னை யெள்ளி, மங்கையர் திறத்துறுங் காமவின்பத்தினையே பயனெனக் கொண்டு, பாட்டுடைத் தலைமகனியற் பெயர்க்குத் தக்கதை யெதுகையாக நாட்டி யுரைத் தவ்வெதுகை படத் தனிச் சொல்லின்றி யின்னிசைக் கலி வெண்பாவாற் றலைமக னிரந்து குறைபெறாது மடலேறுவதா யீரடி யெதுகை வரப்பாடுவது. |
கண்படைநிலை:- அரசரு மரசரைப்போல்வாரு மவைக்கணெடிது வைகியவழி மருத்துவரு மமைச்சரு முதலியோ ரவர்க்குக் கண்டுயில் கோ டலைக் கருதிக் கூறுவது. |
துயிலெடை நிலை:- தன் வலியாற் பாசறைக் கண்ணொரு மனக்கவற்சி யின்றித் துயின்ற வரசர்க்கு நல்ல புகழைக் கொடுத்தலைக் கருதிய சூதர் துயி லெழுப்புத லாகப் பாடுவது. |
பெயரின்னிசை:- பாட்டுடைத் தலைவன் பெயரினைச் சார இன்னி சை வெண்பாவாற் றொண்ணூறேனும், எழுபதேனும், ஐம்பதேனும் பாடுவது. |
ஊரின்னிசை:- பாட்டுடைத் தலைவனூரினைச்சார வின்னிசை வெ ண்பாவாற் றொண்ணூறேனு மெழுபதேனு மைம்பதேனும் பாடுவது. |
பெயர் நேரிசை:- பாட்டுடைத் தலைவன் பெயரினைச்சார நேரிசை வெண்பாவாற் றொண்ணூறேனு மெழுபதேனு மைம்பதேனும் பாடுவது. |
ஊர் நேரிசை: பாட்டுடைத் தலைவ னூரினைச்சார நேரிசை வெண்பாவாற் றொண்ணூறேனு மெழுபதேனு மைம்பதேனும் பாடுவது. |
ஊர் வெண்பா:- வெண்பாவாலூரைச் சிறப்பித்துப் பத்துச்செய்யுட் கூறுவது. |
விளக்குநிலை:- வேலும் வேற்றலையும் விலங்கா தோங்கியவாறு போலக் கோலொடு விளக்கு மொன்றுபட் டோங்குமா றோங்குவதாகக் கூறுவது. |