இரண்டாவது சொல்லதிகாரம். PART II. - WORDS. முதலோத்துச்சொற்பொதுவியல். Chapter I - The General Nature of Words. |
41. | முச்சயத்தொழிற்கொடு முச்சகந்தனித்தா ளச்சயனடிபணிந் தறைகுசொல்விளக்கே. | |
(இ-ள்.) சொல்லிலக்கண மாமாறுணர்த்துதும், யாவராலும் வெல்லப்படாத வல்லமைகொண்டு எல்லாவற்றையும் படைத்தல், அளித்தல், அழித்தல் என்னும் இம்முத்தொழிலை இயற்றி மூவுலகனைத்தையும் பொதுவறத்தான்றனி ஒருவனாயாளாநிற்குங் குறைப்பாடில்லாக் கடவுள் இணையடிமலரை வணங்கிச்சொல்லிலக்கணத்தை விளக்குதும். ஆதியும் அந்தமும் நடுவும் குறையறமுடிப்பதற்கு அதிகாரங்கடோறும் பாயிரமாகத் தெய்வவணக்கம் ஈண்டுஞ்சொல்லுதன் முன்னோர்காட்டிய வழியெனக்கொள்க. ஒன்றும் பலவுங்கூடிய எழுத்தினடையாற் சொற்களாகையின் எழுத்தியல் விளக்கியபின்னர், அவற்றாலாகிய சொல்லைவிளக்கச் சொல்லதிகாரம் வந்த முறையெனக்காண்க. சொல்லெனினும் பதமெனினுமொழியெனினுமொக்கும். இவ்வதிகாரப்பொருளும் பிரிவின்முறையும் இனிவருஞ் சூத்திரத்தால் விளங்கும். இஃது சிறப்புப்பாயிரம். (சூ.) 'தெய்வவணக்கமுஞ் செயப்ப டுபொருளு மெய்தவுரைப்பது தற்சிறப்பாகும்.' எ-று. (1) |
42. | எச்சொல்லும் பெயர்வினை யிடையுரியெனநான் கிவற்றுட்பொதுவென வியற்சொற்றிரிசொ லொருமொழிதொடர்மொழி யொருவிலாப்பொதுமொழி பகாப்பதமென்றா பகுபதமென்றா வாகுபெய ரிருதிணையைம் பான்மூவிடஞ் சாரியையெனப்பொது தகுதியீராறே. | |
(இ-ள்.) பெயரே வினையே இடையே உரியே என நாற்கூறுபாடா கச் சொல்லெல்லாம் வகுக்கப்படும். அவற்றுட்பொருளை விளக்குவது பெயரே. பொருளது தொழிலைவிளக்குவது வினையே. இவையிரண்டை யுஞ் சார்ந்தொன்றுவது இடையே. அவ்விரண்டையுந் தழுவிப் பற்பல குணங்களை விளக்குவது உரியே. |