பக்கம் எண் :

10தொல்காப்பியம் - உரைவளம்
 

சிவ
  

இச்சூத்திரம்  களவொழுக்கம்  மேற்கொண்டவர்  உடன்போக்கினை மேற்கொண்டு சென்ற இடத்திலேயே
கற்பொழுக்கத்தைப் பெறுதலாம் என்கின்றது.
  

இ-ள்:  கொடுத்தற்குரியராகிய    தந்தையர்    தன்னையர்    முதலியோர்    இல்லாமலும்   திருமண
விதிமுறைகளின்படிக்    கற்பொழுக்கத்தை   மேற்கொள்ளலும்   உண்டு;  அது  எப்போதெனின்  களவில்
கிழவனும் கிழத்தியும் புணர்ந்துடன் போகிய காலத்தில் என்க.
  

இக்கற்பு  மேற்கோடலானது  கிழவன்  கிழத்தியர் ஊர்களில் ஒன்றில் நிகழ்வதின்றி உடன்போய காலத்து
யாதேனும் ஓர் ஊரில் சான்றோர் முன்னிலையில் நிகழ்வதாகும்.
  

கரணம்  உண்டு  என்பதற்குக்  கரணமொடு  பொருந்த  மேற்கொள்ளும் கற்பொழுக்கம் எனப் பொருள்
கொள்க.  கொடுப்போர்  இல்லையாயினும்  சென்ற  ஊரில்  உள்ள  சான்றோரே  கொடுப்போராவர் என்க.
எனவே இதுவும் கொடுப்பக் கொள்வதாகவே அமையும்.
  

142.

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க் காகிய காலமும் உண்டே
(3)
 

பி.இ. நூ.
  

மா.அ 168
  

மேலோர் கரணமும் கீழோர் கரணமும்
நூலோர்ந் துரைத்த நுண்ணிய மார்க்கம்
வேற்றுமைப்பட விதித்தனர் துறவுடையோரே.

  

இளம்
  

இதுவுமது.
  

இ-ள்:  மேற்குலத்தாராகிய   அந்தணர்  அரசர்  வணிகர்  என்னும் மூன்று வருணத்தார்க்கும் புணர்ந்த
கரணம் கீழோராகிய வேளாண்மாந்தர்க்கும் ஆகிய காலமும் உண்டு என்றவாறு.
  

இதனாற்  சொல்லியது   முற்காலத்துக்  கரணம்  பொதுப்பட  நிகழ்தலின் எல்லார்க்கும் ஆம் என்பதும்
பிற்காலத்து வேளாண்