போழ்வளி முழங்கும் புல்லென் உயர்சினை முடைநசை இருக்கை பெடைமுகம் நோக்கி ஊன்பதித் தன்ன வெருவரு செஞ்செவி எருவைச் சேவல் கரிபு சிறை தீய வேனின் நீடிய வேயுயர் நனந்தலை நீயுழந் தெய்துஞ் செய்வினைப் பொருட்பிணி பல்லிதழ் மழைக்கண் மாஅயோள்வயிற் பிரியிற் புணர்வதாயிற் பிரியாது ஏந்துமுலை முற்றம் வீங்கப் பல்லூழ் சேயிழை தெளிர்ப்பக் கவைஇ நாளும் மனைமுதல் வினையொடும் உவப்ப நினைமாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தே”1 |
(அகம்-51) |
என வரும். |
சென்று கையிகந்து பெயர்த்துள்ளிய வழியும் என்பது-மேற்கூறியவாறினைக் கையிகந்து2 முன்னொருகாற் சென்று மீட்டும் அந்நெறியினைப் போக நினைந்த வழியும் கூற்று நிகழும் என்றவாறு. |
“இருங்கழி முதலை மேந்தோல் அன்ன கருங்கால் ஓமைக் காண்பின் பெருஞ்சினைக் கடியுடை நனந்தலை ஈன்றிளைப்பட்ட கொடுவாய்ப் பேடைக்கல் திரை தரீஇ மான்று வேட்டெழுந்த செஞ்செவி எருவை வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன் துளங்கு நடை மரையா வலம்படத் தொலைச்சி |
1. பொருள் : ஆள் போக்குவரவு அற்ற சுரத்தில் வெய்யில் காய அதனால் உண்டான எரி பற்றிய யாமரத்தின் கிளையில் புலால் விரும்பி இருக்கும் பேடையை நினைந்து எழுகின்ற செஞ்செவியுடைய ஆண் பருந்தின் சிறகு கரியும்படியான வேனிற்காலம் நீண்ட பரந்த இடங்களில் நெஞ்சமே நீ உழந்து அடையும் பொருள்கள், மாயோளிடத்தினின்று பிரிந்து சென்றால் கைகூடுவதாயினும் அவளை விட்டுப் பிரிதலை மறந்து அவள் முலை வீங்கவும் அணிகள் ஒலிக்கவும் தழுவி அதனால் மனைக்கு முதல்வியாகிய அவள் மனையறச் செயல்களோடு மகிழ்ந்திருக்கும்படியாக நினைவாயாக. |
2. மேற்கூறிய ஆறினைக் கையிகந்து-மேற்கூறிய கடத்தற்கரிய வழியினைக் கடந்து. |